ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

பகுதி - 626

இறைவனுடைய அருள்மொழியை

News image
Updated On :10 ஆகஸ்ட் 2017, 5:56 am

இறைவனுடைய அருள்மொழியைக் கோரும் இப்பாடல் திருவேற்காடுக்கானது.  இதில் சொல்லப்படும் ஆலயமும் தற்போது திருவேற்காடு என்றதும் நினைவுக்கு வரும் ஆலயமும் வேறு என்பதை முன்னமேயே சொல்லியிருந்தோம்.

அடிக்கு ஒற்றொழித்து 34 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்கள் இரண்டு நெடில், இரண்டு குறில், இரண்டு வல்லொற்று என்ற அமைப்பையும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களும் மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களும் ஒரு நெடிலும் இரண்டு குறிலுமாய் மூன்று மூன்று எழுத்துகளைக் கொண்டவை.

தாத்தாத்தன தானன தானன
      தாத்தாத்தன தானன தானன
      தாத்தாத்தன தானன தானன தனதான

கார்ச்சார்குழ லார்விழி யாரயி
         லார்ப்பால்மொழி யாரிடை நூலெழு
         வார்ச்சாரிள நீர்முலை மாதர்கள் மயலாலே

காழ்க்காதல தாமன மேமிக
         வார்க்காமுக னாயுறு சாதக
         மாப்பாதக னாமடி யேனைநி னருளாலே

பார்ப்பாயலை யோவடி யாரொடு
         சேர்ப்பாயலை யோவுன தாரருள்
         கூர்ப்பாயலை யோவுமை யாள்தரு குமரேசா

பார்ப்பாவல ரோதுசொ லால்முது
         நீர்ப்பாரினில் மீறிய கீரரை
         யார்ப்பாயுன தாமரு ளாலர்சொ லருள்வாயே

வார்ப்பேரரு ளேபொழி காரண
         நேர்ப்பாவச காரண மாமத
         ஏற்பாடிக ளேயழி வேயுற அறைகோப

வாக்காசிவ மாமத மேமிக
         வூக்காதிப யோகம தேயுறு
         மாத்தாசிவ பாலகு காவடி யர்கள்வாழ்வே

வேற்காடவல் வேடர்கள் மாமக
         ளார்க்கார்வநன் மாமகி ணாதிரு
         வேற்காடுறை வேதபு ரீசுரர் தருசேயே

வேட்டார்மக வான்மக ளானவ
         ளேட்டார்திரு மாமண வாபொனி
         னாட்டார்பெரு வாழ்வென வேவரு பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.