சிதம்பரத்துக்கு அருகிலுள்ள திருவேட்களம் என்னும் தலத்துக்கான இப்பாடல் ஆசைகள் அற்றுப் போகும்படி வேண்டுகிறது.
அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட இந்தப் பாடலில் எல்லாச் சீர்களிலும் மூன்று மூன்று எழுத்துகளே பயின்றாலும் இவற்றில் ஒரு வேறுபாட்டைப் பார்க்க முடிகின்றது. ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலும் (கணக்கில் சேராத) ஒரு வல்லொற்றும்; இரண்டு, நான்கு ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடில், இரண்டு குறில்களுமாக அமைந்திருக்கின்றன.
தாத்தன தானன தாத்தன தானன
தாத்தன தானன தனதான
மாத்திரை யாகிலு நாத்தவ றாளுடன்
வாழ்க்கையை நீடென மதியாமல்
மாக்களை யாரையு மேற்றிடு சீலிகள்
மாப்பரி வேயெய்தி அநுபோக
பாத்திர மீதென மூட்டிடு மாசைகள்
பாற்படு ஆடக மதுதேடப்
பார்க்கள மீதினில் மூர்க்கரை யேகவி
பாற்கட லானென வுழல்வேனோ
சாத்திர மாறையு நீத்தம னோலய
சாத்தியர் மேவிய பதவேளே
தாத்தரி தாகிட சேக்கெனு மாநட
தாட்பர னார்தரு குமரேசா
வேத்திர சாலம தேற்றிடு வேடுவர்
மீக்கமு தாமயில் மணவாளா
வேத்தம தாமறை யார்த்திடு சீர்திரு
வேட்கள மேவிய பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் ரீவைண்ட்: அறிமுக சீசனில் சிஎஸ்கேவை வீழ்த்தி கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

விண்டோஸ் இயங்குதள பயன்பாட்டைக் கைவிடும் பிரான்ஸ்!

நெல் ஊக்கத்தொகை குறித்த கடிதம் கட்டாய உத்தரவு அல்ல: மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


