திருப்புகழை உரைக்க வேண்டும் என்று கோருகின்ற இந்தப் பாடல் திருப்படிக்கரை என்னும் தலத்துக்கானது. திருமண்ணிப்படிக்கரை என்றும் இலுப்பைப்பட்டு என்றும் வழங்கப்படும் இத்தலம் வைத்தீஸ்வரன்கோவிலுக்கு சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. (‘அருக்கி மெத்தன’ என்று தொடங்கும் இரண்டு பாடல்களில் இது இரண்டாவது. முதற்பாடலை நம் 388ம் தவணையில் பார்த்தோம்.ஸ்ரீ
முற்றிலும் வல்லொற்றுகளாலும் குற்றெழுத்துகளாலும் அமைந்த இப்பாடலில் அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகள் உள்ளன. ஒவ்வொரு சீரிலும் மூன்று மூன்று எழுத்துகளே அமைந்திருந்தாலும் அவற்றுள் வேறுபாடு இருக்கிறது. ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் மூன்று குறில், ஒரு வல்லொற்று என்றும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்கள் மூன்று குறில் இரண்டு வல்லொற்று என்றும் அமைந்துள்ளன.
தனத்த தத்தனத் தனத்த தத்தனத்
தனத்த தத்தனத் தனதான
அருக்கி மெத்தெனச் சிரித்து மைக்கணிட்
டழைத்தி தப்படச் சிலகூறி
அரைப்ப ணத்தைவிற் றுடுத்த பட்டவிழ்த்
தணைத்தி தழ்க்கொடுத் தனுராகத்
துருக்கி மட்டறப் பொருட்ப றிப்பவர்க்
குளக்க ருத்தினிற் ப்ரமைகூரா
துரைத்து செய்ப்பதித் தலத்தி னைத்துதித்
துனைத்தி ருப்புகழ் பகர்வேனோ
தருக்க மற்கடப் படைப்ப லத்தினிற்
றடப்பொ ருப்பெடுத் தணையாகச்
சமுத்தி ரத்தினைக் குறுக்க டைத்ததிற்
றரித்த ரக்கர்பொட் டெழவேபோர்
செருக்கு விக்ரமச் சரத்தை விட்டுறச்
செயித்த வுத்தமத் திருமாமன்
திருத்த கப்பன்மெச் சொருத்த முத்தமிழ்த்
திருப்ப டிக்கரைப் பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் ரீவைண்ட்: அறிமுக சீசனில் சிஎஸ்கேவை வீழ்த்தி கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

விண்டோஸ் இயங்குதள பயன்பாட்டைக் கைவிடும் பிரான்ஸ்!

நெல் ஊக்கத்தொகை குறித்த கடிதம் கட்டாய உத்தரவு அல்ல: மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


