துன்பங்களும் நோய்களும் அழியவும் எப்போதும் இறைவன் திருவடியைச் சிந்திக்கவும் கோரும் இப்பாடல் வேதாரணியத்துக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 30 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, ஆறு ஆகிய சீர்கள் ஒரு நெடிலோடு தொடங்கும் மூன்றெழுத்துகளாகவும்; இரண்டு, ஏழு ஆகிய சீர்கள் இரண்டு குறில்களும் கணக்கில் சேராத இரண்டு வல்லொற்றுகளாகவும்; மூன்று, நான்கு, எட்டு, ஒன்பது ஆகிய சீர்கள் மூன்று குறிலும் ஒரு மெல்லொற்றும் கொண்டு அமைந்துள்ளன.
தானன தத்தத் தந்தன தந்தன தனதானா
சூழும்வி னைக்கட் டுன்பநெ டும்பிணி கழிகாமஞ்
சோரமி தற்குச் சிந்தைநி னைந்துறு துணையாதே
ஏழையெ னித்துக் கங்களு டன்தின முழல்வேனோ
ஏதம கற்றிச் செம்பத சிந்தனை தருவாயே
ஆழிய டைத்துத் தங்கையி லங்கையை யெழுநாளே
ஆண்மைசெ லுத்திக் கொண்டக ரும்புயல் மருகோனே
வேழமு கற்குத் தம்பியெ னுந்திரு முருகோனே
வேதவ னத்திற் சங்கரர் தந்தருள் பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் ரீவைண்ட்: அறிமுக சீசனில் சிஎஸ்கேவை வீழ்த்தி கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

விண்டோஸ் இயங்குதள பயன்பாட்டைக் கைவிடும் பிரான்ஸ்!

நெல் ஊக்கத்தொகை குறித்த கடிதம் கட்டாய உத்தரவு அல்ல: மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


