ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

பகுதி - 470

தேவனூர் என்னும் தலத்துக்கானது. 

Updated On :7 பிப்ரவரி 2017, 7:57 am

பரம்பொருளின் தன்மையைச் சொல்லும் இந்தப் பாடல் செஞ்சிக்கு அருகேயுள்ள தேவனூர் என்னும் தலத்துக்கானது. 

அடிக்கு ஒற்றொழித்து 40 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒவ்வொரு முதற் சீரும் இரண்டாம் சீரும் நெடிலோடு தொடங்குகின்றன.  ஒவ்வொரு மூன்றாம் சீரிலும் மூன்றாம் எழுத்து நெடில்.

தான தானன தனனா தனதன
      தான தானன தனனா தனதன
         தான தானன தனனா தனதன          தந்ததான

காணொ ணாதது உருவோ டருவது
         பேசொ ணாதது உரையே தருவது
         காணு நான்மறை முடிவாய் நிறைவது  பஞ்சபூதக்
      காய பாசம தனிலே யுறைவது
         மாய மாயுட லறிவா வகையது
         காய மானவ ரெதிரே யவரென         வந்துபேசிப்
பேணொ ணாதது வெளியே யொளியது
         மாய னாரய னறியா வகையது
         பேத பேதமொ டுலகாய் வளர்வது      விந்துநாதப்
     பேரு மாய்கலை யறிவாய் துரியவ
         தீத மானது வினையேன் முடிதவ
         பேறு மாயருள் நிறைவாய் விளைவது  ஒன்றுநீயே
வீணொ ணாதென அமையா தசுரரை
         நூறி யேயுயிர் நமனீ கொளுவென
          வேல்க டாவிய கரனே யுமைமுலை   யுண்டகோவே
      வேத நான்முக மறையோ னொடும்விளை
         யாடி யேகுடு மியிலே கரமொடு
         வீற மோதின மறவா குறவர்கு         றிஞ்சியுடே
சேணொ ணாயிடு மிதண்மே லரிவையை
         மேவி யேமயல் கொளலீ லைகள்செய்து
         சேர நாடிய திருடா வருடரு            கந்தவேளே
      சேரொ ணாவகை வெளியே திரியுமெய்ஞ்
         ஞான யோகிக ளுளமே யுறைதரு
         தேவ னூர்வரு குமரா வமரர்கள்        தம்பிரானே.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.