ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

பகுதி -  472

இந்தப் பாடல் தேவனூர் தலத்துக்கானதுதான்.

Updated On :7 பிப்ரவரி 2017, 7:57 am

இறைவனைப் புகழ்ந்து துதிக்கும் பேற்றை வேண்டுகின்ற இந்தப் பாடலும் செஞ்சிக்கு அருகேயுள்ள தேவனூர் தலத்துக்கானதுதான்.

ஒவ்வோரடியும் இரண்டிரண்டு அசைகாளக அமைந்துள்ள 12 சீர்களைக் கொண்டது; 1, 2, 5, 6, 9, 10 ஆகிய சீர்களில் முதலெழுத்து நெடில்; 3, 4, 7, 8, 11, 12 ஆகிய சீர்களில் இரண்டாமெழுத்து மெல்லொற்று என்ற அமைப்பைக் கொண்டது.  அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகள் உள்ளன.

தான தான தந்த தந்த தான தான தந்த தந்த
      தான தான தந்த தந்த                     தனதான

தார காசு ரன்ச ரிந்து வீழ வேரு டன்ப றிந்து
         சாதி பூத ரங்கு லுங்க      -         முதுமீனச்
      சாக ரோதை யங்கு ழம்பி நீடு தீகொ ளுந்த அன்று
         தாரை வேல்தொ டுங்க டம்ப   -      மததாரை
ஆர வார வும்பர் கும்ப வார ணாச லம்பொ ருந்து
         மானை யாளு நின்ற குன்ற     -      மறமானும்
      ஆசை கூரு நண்ப என்று மாம யூர கந்த என்றும்
         ஆவல் தீர என்று நின்று        -      புகழ்வேனோ
பார மார்த ழும்பர் செம்பொன் மேனி யாளர் கங்கை வெண்க
         பால மாலை கொன்றை தும்பை   -    சிறுதாளி
      பார மாசு ணங்கள் சிந்து வார வார மென்ப டம்பு
         பானல் கூவி ளங்க ரந்தை        -     அறுகோடே
சேர வேம ணந்த நம்ப ரீச னாரி டஞ்சி றந்த
         சீத ளார விந்த வஞ்சி        -         பெருவாழ்வே
      தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு
        தேவ னூர்வி ளங்க வந்த    -          பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.