ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

பகுதி - 474

இந்தப் பாடல் நாகப்பட்டினத்துக்கானது. 

Updated On :8 பிப்ரவரி 2017, 6:30 pm

‘உன்னுடைய திருவடியே எனக்கு உற்ற உறவாகச் சேர்த்து வைக்கின்ற ஒப்பற்ற வரத்தைத் தரவேண்டும்’ என்று வேண்டும் இந்தப் பாடல் நாகப்பட்டினத்துக்கானது. 

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளை உடைய பாடல்.  ஒவ்வொரு சீரிலும் மூன்று மூன்று எழுத்துகள்; ஒவ்வொரு மூன்றாவது எழுத்தும் நெடில். ஓரிரு இடையொற்றுகளைத் தவிர்த்து, வல்லின மெல்லின ஒற்றுகள் பாடல் முழுவதிலும் எங்குமே பயிலவில்லை என்பது நோக்கத்தக்கது. 

தனனா தனனா தனனா தனனா
      தனனா தனனா                     தனதான

விழுதா தெனவே கருதா துடலை
         வினைசேர் வதுவே              புரிதாக
      விருதா வினிலே யுலகா யதமே
         லிடவே மடவார்                 மயலாலே
அழுதா கெடவே அவமா கிடநா
         ளடைவே கழியா                 துனையோதி
      அலர்தா ளடியே னுறவாய் மருவோ
         ரழியா வரமே                    தருவாயே
தொழுதார் வினைவே ரடியோ டறவே
         துகள்தீர் பரமே                   தருதேவா
      சுரர்பூ பதியே கருணா லயனே
         சுகிர்தா வடியார்                 பெருவாழ்வே
எழுதா மறைமா முடிவே வடிவே
         லிறைவா எனையா              ளுடையோனே
      இறைவா எதுதா வதுதா தனையே
         இணைநா கையில்வாழ்          பெருமாளே.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.