ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

பகுதி - 476

இந்தத் திருப்புகழ் பாகை தலத்துக்கானது. 

Updated On :10 பிப்ரவரி 2017, 6:30 pm

‘சிவயோக பதந்தனில் வாழ்வு பெறும்படி வேண்டுகிற இந்தத் திருப்புகழ் மாயூரத்துக்கு அருகிலுள்ள பாகை என்னும் தலத்துக்கானது.  இத்தலத்துக்குப் பாகசாலை என்றும் பெயர்.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று மூன்று ஐந்து ஆகிய சீர்களில் முதலெழுத்து நெடிலாக இருக்கிறது; இரண்டு நான்கு ஆறு ஆகிய சீர்களில் மூன்றாம் எழுத்து மெல்லொற்றாக அமைந்துள்ளது.

தான தனந்தன தான தனந்தன
      தான தனந்தன                      தனதான

ஈளை சுரங்குளிர் வாத மெனும்பல
         நோய்கள் வளைந்தற             இளையாதே
      ஈடு படுஞ்சிறு கூடு புகுந்திடு
         காடு பயின்றுயி                  ரிழவாதே
மூளை யெலும்புகள் நாடி நரம்புகள்
         வேறு படுந்தழல்                 முழுகாதே
      மூல மெனுஞ்சிவ யோக பதந்தனில்
         வாழ்வு பெறும்படி                மொழிவாயே
வாளை நெருங்கிய வாவியி லுங்கயல்
         சேல்கள் மறிந்திட                வலைபீறா
      வாகை துதைந்தணி கேத கைமங்கிட
         மோதி வெகுண்டிள              மதிதோயும்
பாளை நறுங்கமழ் பூக வனந்தலை
         சாடி நெடுங்கடல்                 கழிபாயும்
      பாகை வளம்பதி மேவி வளஞ்செறி
         தோகை விரும்பிய               பெருமாளே.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.