‘மாயை கருணை பொழிந்து மேவிய பெருமாளே’ என்று இந்தப் பாடலில் இறைவனை அழைப்பதால், இதில் மாயை என்ற பெயரால் சுட்டப்படுவது மாயாபுரி எனப்படும் தலம்; ஹரித்வாரை பிங்கல நிகண்டு ‘அரித்துவார மாயாபுரியே’ என்று குறிப்பதால் இது ஹரித்வாரைக் குறிக்கும் பாடல் என்று உரையாசிரியர் குகத்திரு செங்கல்வராய பிள்ளையவர்கள் குறித்திருக்கிறார்கள்.
‘சிகரம் அருந்த’ என்று தொடங்குவது ‘மலையை எப்படி அருந்துவது’ என்று திகைக்க வைத்தாலும், ‘அகரம்’ என்பது அ என்னும் எழுத்தைக் குறிக்கிறது; தகரம் என்பது த என்னும் எழுத்தைக் குறிக்கிறது; அதுபோல சிகரம் என்பது சி என்னும் எழுத்தைக் குறிக்கிறது என்று அறிகிறோம். இதன் விரிவைப் பொருள் காணும்போது காணலாம்.
அடிக்கு ஒற்றொழித்து 20 எழுத்துகளைக் கொண்ட பாடல்; ஒவ்வொரு சீரும் மும்மூன்று எழுத்துகளால் அமைந்திருந்தாலும், முதற்சீர் குற்றெழுத்துகளால் ஆனது; இரண்டாம் சீர் மெல்லொற்றோடு கூடியது; மூன்றாம் சீர் நெடிலோடு தொடங்குவது.
தனன தனந்த தானன தனதான
தனன தனந்த தானன தனதான
சிகர மருந்த வாழ்வது சிவஞானம்
சிதறி யலைந்து போவது செயலாசை
மகர நெருங்க வீழ்வது மகமாய
மருவி நினைந்தி டாவருள் புரிவாயே
அகர நெருங்கி னாமய முறவாகி
அவச மொடுங்கை யாறொடு முனமேகிக்
ககன மிசைந்த சூரியர் புகமாயை
கருணை பொழிந்து மேவிய பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

