ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பகுதி - 500

முருகனுக்கு உகந்த 29 தலங்களின்

Updated On :10 மார்ச் 2017, 12:57 pm

இப்பாடல் க்ஷேத்திரக்கோவை என்று வழங்கப்படுவது.  முருகனுக்கு உகந்த 29 தலங்களின் பெயரைத் தொகுத்து இந்தப் பாடலில் சொல்லியிருக்கிறார்.  சிக்கலான சந்த அமைப்பைக் கொண்ட திருப்புகழில், சந்த ஓட்டத்துக்குப் பொருந்த ஒன்றிரண்டு, மூன்று நான்கு தலங்களின் பெயரைச் சொல்வதே சவால் எனும்போது, மிக அருமையான தாளக்கட்டுத் தவறாமல், எழுத்துக் கணக்கும் மிகச்சரியாக இடம்மாறாமல் நிற்க வேண்டிய ஒற்றெழுத்துகளும் பிசகாமல் இத்தனைத் தலங்களின் பெயரையும் வரிசையிட்டுச் சொல்வதும் அசாத்தியமான வேலைப்பாடு.  இப்படிப் பாடுவது அருட்கவிகளுக்கே சாத்தியம்.  முருகனையே தன் குருநாதனாகக் கொண்ட நம் குருநாதருக்கு முடியாதது என்றொன்றும் உண்டோ!

பாடலின் அமைப்பைப் பார்ப்போம்.  ஒவ்வோரடிக்கும் ஒற்றுநீக்கி 37 எழுத்துகள்; 1, 5, 9 ஆகிய சீர்கள் ஒற்றொழித்து இரண்டெழுத்தையும்; இரண்டவதாக வரும் (கணக்கில் சேராத) எழுத்து மெல்லொற்றாகவும்; 2, 6, 10 ஆகிய சீர்கள் நெடிலோடு தொடங்கும் மூன்றெழுத்துகளாகவும்; 3, 7, 11 ஆகிய சீர்கள் முதலிரு எழுத்தும் நெடிலாகவும் மூன்றாவது எழுத்து குறிலாகவும் உள்ள மூன்றெழுத்துகளாகவும்; 4, 8, 12 ஆகிய சீர்கள் ஒற்றொழித்து மூன்றெழுத்தும்; இடையில் கணக்கில் சேராத மெல்லொற்று இரண்டாமெழுத்தாகவும் அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.  இத்தனைக் கடினமான அமைப்பில் 29 தலங்களின் பெயர்களை வரிசைப்படுத்துவது மிகப்பெரிய சவால்.  இறையருள் பெற்று கவிபாடுபவர்களுக்கு இயலாதது என்று ஒன்றுமே இல்லை என்பதை இந்த அசாத்தியமான வேலைப்பாட்டால் குருநாதர் உணர்த்துகிறார்.

தந்த தானன தானான தந்தன
                தந்த தானன தானான தந்தன
                        தந்த தானன தானான தந்தன                                 தனதான

கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம்
                        உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு
                        கொன்றை வேணியர் மாயூர மம்பெறு           சிவகாசி
                கொந்து லாவிய ராமேசு ரந்தனி
                        வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர்
                        கும்பு கூடிய வேளூர் பரங்கிரி                                 தனில்வாழ்வே
செம்பு கேசுர மாடானை யின்புறு
                        செந்தி லேடகம் வாழ்சோலை யங்கிரி
                        தென்றன் மாகிரி நாடாள வந்தவ                        செகநாதஞ்
                செஞ்சொ லேரக மாவா வினன்குடி
                        குன்று தோறுடன் மூதூர்வி ரிஞ்சைநல்
                        செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் வருதேவே
கம்பை மாவடி மீதேய சுந்தர
                        கம்பு லாவிய காவேரி சங்கமு
                        கஞ்சி ராமலை வாழ்தேவ தந்திர                         வயலூரா
                கந்த மேவிய போரூர்ந டம்புரி
                        தென்சி வாயமு மேயாய கம்படு
                        கண்டி யூர்வரு சாமீக டம்பணி                               மணிமார்பா
எம்பி ரானொடு வாதாடு மங்கையர்
                        உம்பர் வாணிபொ னீள்மால் சவுந்தரி
                        எந்த நாள்தொறு மேர்பாக நின்றுறு                    துதியோதும்
                இந்தி ராணிதன் மாதோடு நன்குற
                        மங்கை மானையு மாலாய்ம ணந்துல
                        கெங்கு மேவிய தேவால யந்தொறு                  பெருமாளே.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.