இந்தப் பாடல் அரக்கோணத்துக்கு 35 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்துக்கு சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் வெள்ளிகரம் என்னும் தலத்துக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 16 எழுத்துகளைக் கொண்ட பாடல். முதல் ஆறு சீர்களும் ஒற்றொழித்து இரண்டிரண்டு எழுத்துகளைக் கொண்டவை. அத்தனையுமே குற்றெழுத்துகள். ஒவ்வொரு சீரிலும் கணக்கில் சேராத இரண்டாமெழுத்து இடையின மெய்யாக அமைந்துள்ளது. இப்பாடலில் வல்லின மெய்கள் பயிலவில்லை.
தய்ய தய்ய தய்ய தய்ய
தய்ய தய்ய தனதான
தொய்யில் செய்யில் நொய்யர் கையர்
தொய்யு மைய இடையாலுந்
துள்ளி வள்ளை தள்ளி யுள்ளல்
சொல்லு கள்ள விழியாலும்
மைய செவ்வி மவ்வல் முல்லை
மல்கு நல்ல குழலாலும்
மையல் கொள்ள எள்ளல் செய்யும்
வல்லி சொல்லை மகிழ்வேனோ
செய்ய துய்ய புள்ளி நவ்வி
செல்வி கல்வ ரையிலேனல்
தெய்வ வள்ளி மையல் கொள்ளு
செல்வ பிள்ளை முருகோனே
மெய்யர் மெய்ய பொய்யர் பொய்ய
வெள்ளை வெள்ளி நகர்வாழ்வே
வெய்ய சைய வில்லி சொல்லை
வெல்ல வல்ல பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

