‘ஆவி நைந்து மங்காமல் உன்னுடைய அருளைத் தரவேண்டும் என்று கோரும் இப்பாடல் திருச்செங்கோட்டுக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 19 எழுத்துகளைக் கொண்ட பாடல். மெல்லொற்றுகளால் நிறைந்த இப்பாடலில் ஒருசில இடையின ஒற்றுகளும் பயில்கின்றன. வல்லொற்று எதுவும் இல்லை. ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் குறில்-நெடில்-குறில் என மூன்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும் பயில்கின்றன.
தந்தான தந்த தந்தான தந்த
தந்தான தந்த தனதான
பந்தாடி யங்கை நொந்தார் பரிந்து
பைந்தார் புனைந்த குழல்மீதே
பண்பார் சுரும்பு பண்பாடு கின்ற
பங்கே ருகங்கொள் முகமீதே
மந்தார மன்றல் சந்தார மொன்றி
வன்பாத கஞ்செய் தனமீதே
மண்டாசை கொண்டு விண்டாவி நைந்து
மங்காம லுன்ற னருள்தாராய்
கந்தா அரன்றன் மைந்தா விளங்கு
கன்றா முகுந்தன் மருகோனே
கன்றா விலங்க லொன்றாறு கண்ட
கண்டா வரம்பை மணவாளா
செந்தா தடர்ந்த கொந்தார் கடம்பு
திண்டோள் நிரம்ப அணிவோனே
திண்கோ டரங்க ளெண்கோ டுறங்கு
செங்கோட மர்ந்த பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆஷா போஸ்லே மறைவு: ராகுல் காந்தி இரங்கல்

செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்

அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

மீண்டும் சமனில் முடிந்த இன்டர் மியாமி ஆட்டம்: இளம் வீரர்களுடன் அசத்திய மெஸ்ஸி!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


