‘கருவிலே விழுந்து மீண்டும் மீண்டும் பிறக்கின்ற இந்த நிலை ஒழியவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருச்செந்தூருக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும் உள்ளன.
தனதனன தந்த தனதனன தந்த
தனதனன தந்த தனதான
மனைகனக மைந்தர் தமதழகு பெண்டிர்
வலிமைகுல நின்ற நிலையூர்பேர்
வளரிளமை தஞ்ச முனைபுனைவ ளங்கள்
வரிசைதம ரென்று வருமாயக்
கனவுநிலை யின்ப மதனையென தென்று
கருதிவிழி யின்ப மடவார்தம்
கலவிமயல் கொண்டு பலவுடல்பு ணர்ந்து
கருவில் விழுகின்ற தியல்போதான்
நினையுநின தன்பர் பழவினைக ளைந்து
நெடுவரைபி ளந்த கதிர்வேலா
நிலமுதல் விளங்கு நலமருவு செந்தில்
நிலைபெறஇ ருந்த முருகோனே
புனைமலர்பு னைந்த புனமறம டந்தை
புளகஇரு கொங்கை புணர்மார்பா
பொருதுடனெ திர்ந்த நிருதர்மகு டங்கள்
பொடிபடந டந்த பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல் நாள் அறிவிப்பு; மறுநாளே ரத்து! பேசுபொருளாகும் விஜய்யின் பிரசாரம்!
இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில்...
திரைக்கதிர்
சாணத்தில் இருந்து சமையல் எரிவாயு...
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


