பகுதி - 770

என்னை ஆண்டருளவேண்டும்
பகுதி - 770
Updated on
1 min read

‘என்னை ஆண்டருளவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருக்காளத்தித் தலத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 14 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  முதற் சீரில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; இரண்டாவது சீரில் ஒரு நெடிலும் இரண்டு குறிலும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும்; மூன்றாவதாக உள்ள தொங்கல் சீரில் இரண்டு குற்றெழுத்துகளும் இரண்டு நெட்டெழுத்துகளும் உள்ளன.

தனத் தானத்தத் தனதானா
                                  தனத் தானத்தத் தனதானா

சிரத்தா னத்திற் பணியாதே செகத்
                                  தோர்பற்றைக் குறியாதே

வருத்தா மற்றொப் பிலதான மலர்த்
                                   தாள்வைத்தெத் தனையாள்வாய்

நிருத் தாகர்த்தத் துவநேசா நினைத்
                                   தார்சித்தத் துறைவோனே

திருத் தாள்முத்தர்க் கருள்வோனே
                                   திருக் காளத்திப் பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com