பதச் சேதம் | சொற் பொருள் |
துயரம் அறு(ம்) நின்வறுமை தொலையும்
| மொழியும்: சொல்லப்படும்--பிரசித்திபெற்ற; சுரபானம்: தேவர்கள் பருகும் உணவு; |
சுரபி குளிகை எளிதுபெறுக துவளும்எமது | சுரபி: காமதேனு; குளிகை: ரசகுளிகை—எல்லாவற்றையும் பொன்னனாக மாற்ற வல்லது; |
தயிரும் அமுதும்அமையும் இடுக சவடி | சவடி: காதணி; கடக(ம்): தோள் வளை; நெளி: ஒருவகையான மோதிரம்; காறை: கழுத்தணி; |
தருக தகடொடு உறுகஎனும் இவ்விரகுதவிர்வதும் ஒருநாளே | தருக: தரவல்ல; தகடொடு: தாயத்துத் தகடு; உறுக: பெறுக; விரகு: தந்திர மொழி; தவிர்வதும்: விடுபடுவதும்; |
உயரு(ம்) நிகர் இல்சிகரி மிடறும் உடலும் | உயரும்: உயர்ந்துள்ளதும்; நிகரில்: இணையற்றதும்; சிகரி: மலை—கிரெளஞ்சம்; மிடறு: தொண்டை, கழுத்து; |
உருவ மகர முகரதிமிர உததி உதரம்அது பீற | உருவ: உருவிச் செல்ல; மகர: மீன் (உலவுவதும்); முகர: ஒலிப்பதும்; திமிர: இருண்டதும்; உததி: கடல்; உதரமது பீற: வயிறு கிழிபட; |
அயரும் அமரர் சரணநிகள(ம்) முறியஎறியும்
| அயரும்: சோர்வுறும்; சரண(ம்): கால்; நிகளம்: விலங்கு; சரண நிகளம்: கால்விலங்கு; அயில்: கூர்மை (ஆகுபெயராக வேல்); |
அறிவும் உரமும்அறமு(ம்) நிறமும் அழகும்
| உரம்: வலிமை; நிறம்: ஒளி; |
துயரம் அறு(ம்) நின் வறுமை தொலையும் மொழியும் அமிர்த சுர பானம் சுரபி குளிகை எளிது பெறுக... உன்னுடைய எல்லாத் துன்பமும் தீரும்; வறுமை தொலையும்; பிரசித்தி பெற்ற அமுதம் எனப்படும் தேவர்கள் பருகுகின்ற உணவையும் காமதேனுவையும் (எதையும் பொன்னாக்க வல்ல) ரசகுளிகையையும் நீ எளிதில் பெறலாம்;
துவளும் எமது பசி தீரத் தயிரும் அமுதும் அமையும் இடுக சவடி கடக நெளி காறை தருக தகடொடு உறுக... என்னைத் துவளச் செய்கின்ற பசி தீரும்படியாக தயிர்சோற்றை இடு; (உனக்கு நான் பொன்னாலான) காதணியையும் தோள் வளையையும் நெளி மோதிரத்தையும் கழுத்தணியையும் தரவல்ல தாயித்தைத் தருவேன்; பெற்றுக்கொள்வாய்;
எனும் இவ்விரகு தவிர்வதும் ஒரு நாளே... என்றெல்லாம் சொல்கின்ற (ரசவாதிகளின்) கபடமொழிகளிலிருந்து என்றேனும் விடுபடுவேனா? (இந்தக் கபடத்திலிருந்து அடியேனை விடுவித்தருள வேண்டும்.)
உயரு(ம்) நிகர் இல் சிகரி மிடறும் உடலும் அவுணர் நெடு மார்பும் உருவ மகர முகர திமிர உததி உதரம் அது பீற... உயர்ந்து எழுவதும்; ஒப்பற்றதுமான கிரெளஞ்ச மலையையும்; அரக்கர்களுடைய கழுத்தையும் உடலையும் அகன்ற மார்பையும் ஓடுருவும்படியும்; சுறா மீன்கள் திரிவதும் பேரொலியை எழுப்புவதும் இருண்டதுமான கடலுடைய வயிறு கிழியும்படியாகவும்;
அயரும் அமரர் சரண நிகள(ம்) முறிய எறியும் அயில் வீரா... சோர்வுற்றுக் கிடந்த தேவர்களுடைய கால் விலங்குகள் உடைபடும்படியாகவும் வேலை வீசிய வீரனே!
அறிவும் உரமும் அறமு(ம்) நிறமும் அழகும் உடைய பெருமாளே.... அறிவுச் செறிவும் வலிமையும் அறமும் ஒளியும் அழகும் நிறைந்து விளங்குகின்ற பெருமாளே!
சுருக்க உரை
உயர்ந்தெழுவதும் இணையற்றதுமான கிரெளஞ்ச மலையும் அசுரர்களுடைய கழுத்தும் பெரிய உடலும் மார்பும் துண்டுபடும்படியாகவும்; சுறா மீன்கள் திரிவதும் பேரொலியை எழுப்புவதும் இருண்டதுமான கடலுடைய வயிறு கிழியும்படியாகவும்; சோர்வுற்றுக்க கிடந்த தேவர்களுடைய கால்விலங்கு தெறிக்கும்படியாகவும் வேலை வீசிய வீரனே! அறிவுச் செறிவும் வலிமையும் தருமமும் ஒளியும் அழகும் நிறைந்து விளங்குகின்ற பெருமாளே!
‘உன்னுடைய துன்பமெல்லாம் தீரும்; வறுமை ஒழியும்; தேவர்கள் பருகும் அமுதத்தையும் காமதேனுவையும் எதையும் பொன்னாக மாற்றக்கூடிய ரசகுளிகையையும் நீ எளிதில் அடையுமாறு செய்கிறேன். ரசவாதத்தால் உனக்குப் பொன்னாலான காதணி, தோளணி, கழுத்தணிகளை உண்டாக்கித் தருகிறேன். தாயித்தையும் தருகிறேன். இப்போது என் பசியடங்கும்படியாகக் கொஞ்சம் தயிர்சோற்றைப் போடு’ என்று பேசுகின்ற கபடவேட ரசவாதிகளின் அசட்டுப் பேச்சுகளிலிருந்து நான் விடுபடும்படிச் செய்து அடியேனை ஆண்டுகொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


