பதச் சேதம் | சொற் பொருள் |
கொடியன பிணிகொ(ண்)டு
| கக்கி: வாந்தியெடுத்து; கூன்போந்து: கூன் விழுந்து; |
குடில் உற வரும் ஒருமிக்க சித்ர கோண்பூண்டு அமையாதே
| குடில்: உடல்; மிக்கச் சித்ர: மிகவும் விசித்திரமான; கோண் பூண்டு: கோணலான (Crooked) நிலையை அடைந்து; |
பொடிவன பரசமயத்து தப்பி போந்தேன் தலைமேலே
| பொடிவன: பொடிப்பொடியாகப் போகும்; பரசமயத்து: புற மதங்களுடைய; |
பொருள் அது பெறஅடி நட்பு சற்று பூண்டு ஆண்டுஅருள்வாயே
|
|
துடி பட அலகைகள்கை கொட்டிட்டு சூழ்ந்து ஆங்கு உடன்ஆட
| துடி பட: உடுக்கை ஒலிக்க; அலகைகள்: பேய்கள்; |
தொகு தொகு திகு திகுதொக்கு
|
|
படி தரு பதிவ்ரதைஒத்த சுத்த பாழ் கான்தனில் ஆடும்
| படிதரு: (தாளத்தைப்) படியும்படியாக, அழுந்தப் போடும்; பாழ் கான்: சுடுகாடு; |
பழயவர் குமர குறதத்தைக்கு
| பழயவர்: பழையவர், ஆதியானவர்; குறத் தத்தைக்கு: குறக்கிளிக்கு—வள்ளிக்கு; பாங்காம்: துணை ஆகின்ற; |
கொடியன பிணி கொ(ண்)டு விக்கிக் கக்கிக் கூன் போந்து அசடு ஆகும். கொடிய நோய்களை அடைந்து விக்கியும் வாந்தியெடுத்தும் கூன் விழுந்தும் அறிவிலே கலக்கம் அடைந்தும்;
குடில் உற வரும் ஒரு மிக்கச் சித்ரக் கோண் பூண்டு அமையாதே... உடலிலே விசித்திரமாக வந்து பொருந்தும் கோணலான தன்மையை அடையாமல்,
பொடிவன பர சமயத்துத் தப்பிப் போந்தேன் தலை மேலே... பொடிபட்டு அழியக்கூடிய புறச்சமயங்களிடமிருந்து தப்பித்துக்கொண்டு வந்திருக்கின்ற என்னுடைய தலையின் மேலே,
பொருள் அது பெற அடி நட்புச் சற்றுப் பூண்டு ஆண்டு அருள்வாயே. மெய்ப்பொருளை அடியேன் அடையும் வண்ணமாக அன்புகொண்டு உனது திருவடிகளை வைத்து ஆண்டருள வேண்டும்.
துடி பட அலகைகள் கைக் கொட்டிட்டுச் சூழ்ந்து ஆங்கு உடன் ஆட. உடுக்கைகள் ஒலிக்க, பேய்கள் கைகளைக் கொட்டிக்கொண்டு வட்டமாகச் சூழ்ந்துகொண்டு (உடுக்கை, கைத்தாள ஒலிக்கு) இசைவாக ஆட,
தொகு தொகு திகு திகு தொக்குத் திக்குத் தோம் தாம் தரி தாளம் படி தரு பதிவ்ரதை ஒத்த... தொகு தொகு திகு திகு தொக்குத் திக்குத் தோம் தாம்தரி என்றவண்ணமாகத் தாளத்தை அழுந்தப் போடுகின்ற பதிவிரதையாகிய உமாதேவியோடு,
சுத்தப் பாழ்ங் கான் தனில் ஆடும் பழயவர் குமர குறத் தத்தைக்குப் பாங்காம் பெருமாளே....சுடுகாட்டில் நடனமாடும் முதல்வரான சிவபெருமானுடைய குமரனே! குறமங்கையான வள்ளிக்குத் துணைவனான பெருமாளே!
சுருக்க உரை
உடுக்கைகள் ஒலிக்க; பேய்கள் கைத்தாளம் போட்டபடிக் கூத்தாட; தொகுதொகு திகுதிகு என்றெல்லாம் தாளம் அழுத்தமாக விழும்படியாக உமாதேவியார் உடன் ஆட, சுடுகாட்டில் நடனமாடும் முதல்வரான சிவபெருமானுடைய குமரனே! குறவள்ளிக்குத் துணைவனான பெருமாளே!
கொடுமையான நோய்களால் துன்புற்று, விக்கி, வாந்தியெடுத்துக் கூன் விழுந்து அறிவிலே மயக்கம் ஏற்பட்டு, உடலிலே ஏற்படுகின்ற விசித்திரமானதும் கோணலாதுமான மாறுபாட்டை நான் அடையாமல் அடியேன் மெய்ப்பொருளை உணரும் வண்ணமாக என்னுடைய தலையின் மீது உனது திருவடிகளை அன்போடு சூட்டியருள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


