பதச் சேதம் | சொற் பொருள் |
நாரியர்கள் ஆசையைகருதாதே
| நாரியர்கள்: பெண்களுடைய; |
நான் உன் இரு பாதபத்மமும் நாட
| பாத பத்மம்: திருவடித் தாமரை; |
ஆர அமுதமானசர்க்கரை தேனே
| ஆர அமுது: தெவிட்டாத அமுது; |
ஆன அநுபூதியைதருவாயே
|
|
காரணம் அதாய உத்தம சீலா
|
|
கான குற மாதினைபுணர்வோனே
|
|
சூரர் கிளை தூள் எழபொரும் வேலா
|
|
தோகை மயில்வாகன பெருமாளே.
|
|
நாரியர்கள் ஆசையைக் கருதாதே நான் உன் இரு பாத பத்மமும் நாட... பெண்கள் மீது எழும் ஆசையைச் சிந்தை செய்யாமல் உன்னுடைய இரண்டு திருவடித் தாமரைகளையும் நாடுவதற்கு,
ஆர அமுதமான சர்க்கரை தேனே ஆன அநுபூதியைத் தருவாயே... தெவிட்டாத அமுதம், சர்க்கரை, தேன் என்னும்படியான அனுபவ ஞானத்தைத் தந்தருள வேண்டும்.
காரணம் அதான உத்தம சீலா... எல்லாவற்றுக்கும் மூல காரணமாக நிற்கும் உத்தம சீலனே!
கான குற மாதினைப் புணர்வோனே... காட்டில் வளர்ந்த குறமகளான வள்ளியை மணந்தவனே!
சூரர் கிளை தூள் எழப் பொரும் வேலா... சூரனும் அவன் சுற்றத்தாரும் இறந்து புழுதி பறக்குமாறு போரிட்ட வேலனே!
தோகை மயில் வாகனப் பெருமாளே.... தோகை மயிலை வாகனமாகக் கொண்டிருக்கும் பெருமாளே!
சுருக்க உரை
எல்லாவற்றுக்கும் மூலகாரணமாக விளங்குகின்ற உத்தம சீலனே! காட்டில் வளர்ந்த குறப்பெண்ணான வள்ளியை மணந்தவனே! சூரன் தன் சுற்றத்தாரோடு இறந்து விழுந்த புழுதி பறக்குமாறு போரிட்ட வேலனே! தோகை மயிலை வாகனமாகக் கொண்டிருக்கும் பெருமாளே!
பெண்களின்பால் எழுகின்ற ஆசையைச் சிந்தை செய்யாமல் உன்னுடைய திருவடித் தாமரைகளை விரும்பித் தேடுவதற்காக தெவிட்டாத அமுதத்தையும் சர்க்கரையையும் தேனையும் ஒத்த ஞானானுபவத்தைத் தந்தருள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல் நாள் அறிவிப்பு; மறுநாளே ரத்து! பேசுபொருளாகும் விஜய்யின் பிரசாரம்!
இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில்...
திரைக்கதிர்
சாணத்தில் இருந்து சமையல் எரிவாயு...
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


