பதச் சேதம் | சொற் பொருள் |
நிறை மதி முகம் எனும் ஒளியாலே
| |
நெறி விழி கணை எனு(ம்) நிகராலே
| |
உறவு கொள் மடவர்கள் உறவு ஆமோ
|
|
உன திருவடி இனி அருள்வாயே
|
|
மறை பயில் அரி திரு மருகோனே
|
|
மருவலர் அசுரர்கள் குலகாலா
| மருவலர்: பகைவர்கள்; |
குற மகள் தனை மணம் அருள்வோனே
|
|
குருமலை மருவிய பெருமாளே.
| குருமலை: சுவாமி மலை; |
நிறைமதி முகமெனும் ஒளியாலே... முழுமதியை ஒத்த முகத்தின் பிரகாசத்தாலும்;
நெறிவிழி கணையெனு நிகராலே... வழிகாட்டுகிற கண்கள் என்னும் அம்புகள் செய்கின்ற போராலும்;
உறவுகொள் மடவர்கள் உறவாமோ... உறவு கொண்டாடுகின்ற பெண்களுடைய உறவு தகுமோ?
உனதிரு வடியினி யருள்வாயே... இனியேனும் உன்னிரு திருவடிகளைத் தந்தருள வேண்டும்.
மறைபயி லரிதிரு மருகோனே... வேதங்களில் விளங்குகின்ற திருமாலுக்கும் இலக்குமிக்கம் மருகனே!
மருவல ரசுரர்கள் குலகாலா... பகைவர்களாகிய அசுரர்களின் குலத்துக்குக் காலனாக விளங்குபவனே!
குறமகள் தனை மண மருள்வோனே... குறமகளான வள்ளியை மணமுடித்தவனே!
குருமலை மருவிய பெருமாளே.... சுவாமிமலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!
சுருக்க உரை
வேதங்களில் பயில்கின்ற திருமாலின் மருகனே! பகைவர்களான அசுரர்களுடைய குலத்துக்கு யமனாக விளங்குபவனே! குறமகளான வள்ளியை மணமுடித்தவனே! சுவாமி மலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!
பூரண சந்திரனைப் போன்ற முகத்தின் ஒளியாலும்; வழிகாட்டுகின்ற கண்களாகிய அம்புகள் விளைக்கின்ற போராலும் என்னோடு உறவாடவரும் பெண்களுடைய தொடர்பு முறையானதோ? இத்தகைய தீவினைகள் அறும்படியாக உன்னுடைய திருவடிகளைத் தந்தருள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 26 - நேரலை

நேஷனல் கிரஷ் கயாடு லோஹர் - புகைப்படங்கள்

16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை வேண்டும்! - அன்புமணி

கடைசி டி20: சூர்யவன்ஷி அரைசதம் விளாசல்; ஜிம்பாப்வேவுக்கு 193 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



