பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

அனைவருக்கும் நன்றி: சூர்யா - ஜோதிகா திருமண நாள் கொண்டாட்டம்!

சூர்யா - ஜோதிகா தம்பதியின் 20 ஆண்டுகால திருமண வாழ்வைக் கொண்டாடும் மற்றொரு காணொலியை இன்று வெளியிட்டுள்ளனர்.

சூர்யா - ஜோதிகா திருமண நாள் கொண்டாட்டம்

Published On :

சூர்யா - ஜோதிகா தம்பதியின் 20 ஆண்டுகால திருமண வாழ்வைக் கொண்டாடும் மற்றொரு காணொலியை இன்று வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் முக்கியமானவர்கள் சூர்யா - ஜோதிகா. காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் சினிமாவைக் கடந்து தனிப்பட்ட வாழ்விலும் ரசிகர்கள் உள்பட பலருக்கும் முன்மாதிரியாக இருக்கின்றனர்.

இருவரும் கடைசியாக சில்லென்று ஒரு காதல் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். திருமணத்திற்கு பின் பல ஆண்டுகளுக்குப் பின் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா, அவ்வப்போது தமிழ், ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

சூர்யா - ஜோதிகா இணையின் திருமண பந்தம் 20 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள நிலையில், அதுதொடர்பாக 'தொடர்ச்சி’ (The Sequel) என்ற பெயரில் திருமண உறுதிமொழி புதுப்பித்தல் காணொலி ஒன்றை சில நாள்களுக்கு முன் வெளியிட்டனர்.

அதில், 20 ஆண்டுகால திருமண வாழ்வைக் கொண்டாடும் விதமாக ஸ்காட்லாந்தில் உள்ள தேவாலயத்தில் இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிகழ்வை தங்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் சூழ நடத்தியுள்ளனர்.

அதுதொடர்பாக வெளியான காணொலி மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில், திருமண நிகழ்வை நடத்திக் கொடுத்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா இன்று காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சூர்யா - ஜோதிகா இணைந்து அவர்களின் திருமண வாழ்க்கைப் பற்றிப் பேசுவது திருமண நிகழ்வின் பின்னணியில் சேர்க்கப்பட்டுள்ளது.

அந்தப் பதிவில், ”பனிமூட்டமான மலைப்பகுதிகளும் ஏரிகளும் காதல் கொள்ளும் ஸ்காட்லாந்து, எங்களின் காதலையும் பிரதிபலிக்கும் விதமாக இருந்ததால் நாங்கள் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தோம். ஆனால், வீடு திரும்புகையில் நினைவுகளை விட மேலான ஒன்றை நாங்கள் சுமந்து சென்றோம். பரந்த மனதுள்ள, உண்மையான அன்பைக் காட்டும் மனிதர்களைச் சந்தித்ததால் எங்கள் இதயங்கள் ஸ்காட்லாந்தை விட்டு எப்போதும் பிரியாது” எனக் குறிப்பிட்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Summary

Another video celebrating the 20-year married life of the Suriya-Jyothika couple has been released today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.