சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று - (06.08.1946) - 'பெண்களுக்கு ஆண்களுடன் சம உரிமை வேண்டும்'

ஆண்களுடன் பெண்களுக்கு சரி சமானமான உரிமைகள் வேண்டுமா என்பது பற்றி சென்னையில் ஓர் விவாதம் நடைபெற்றது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2015, 12:41 pm

ஆண்களுடன் பெண்களுக்கு சரி சமானமான உரிமைகள் வேண்டுமா என்பது பற்றி சென்னையில் ஓர் விவாதம் நடைபெற்றது.

மாதர்களுக்கு சம உரிமை வேண்டும் என்பதை ஆதரித்து இரு பெண்கள் பேசினர். இருவர், அவசியம் இல்லை என்று வாதித்தனர்.

பார்வையாளராக வந்திருந்த ஸ்ரீமதி சுசேதா கிருபளானி, இம்மாதிரி சர்ச்சைகள் அவசியம் இல்லை என்றும், பெண்களுக்கு சம உரிமைகள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் எல்லோரும் அபிப்ராயப்படுகிறார்கள் என்றும், புராதன காலத்தில் பெண்களுக்கு சம உரிமை இருந்தது என்றும் கூறினார்.

***

'ஆண்களுடன் பெண்கள் போட்டியிடக்கூடாது'

பெண்களும் நாளைய உலகமும் என்பது பற்றி ஒய்.டபிள்யூ.ஸி.ஏ.யில் ஸ்தல ஸ்தாபன மந்திரி ஸ்ரீ டேனியல் தாமஸ் பேசினார்.

பெண்கள், ஆண்களுக்கு சமமாக வாழ்க்கையில் எல்லாத் துறைகளிலும் வருகிறார்கள் என்றும், பெண்களுக்கு தனிப்பட்ட குண விசேஷங்கள் இருக்க வேண்டும் என்றும், வாழ்க்கையில் பல்வேறு துறைகளில் கலந்துகொள்கையில் பெண்கள் ஆண்களுடன் போட்டியிடக்கூடாது என்றும், பெண்களுக்கு சரியான இடம் வீடு என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.