சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று - (17.08.1957) - உணவு விநியோகம்: புது ஏற்பாடு - நகரங்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டம்

முக்கியமான நகரங்களில் கூட்டுறவு பண்டகசாலைகள் மூலம் உணவு தானியங்கள் விற்பனைக்கு ஏற்பாடு செய்வது பற்றி ராஜ்ய சர்க்கார்களுடன் மத்திய சர்க்கார் கடிதப் போக்குவரத்து நடத்திவருவதாக மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2015, 12:27 pm

முக்கியமான நகரங்களில் கூட்டுறவு பண்டகசாலைகள் மூலம் உணவு தானியங்கள் விற்பனைக்கு ஏற்பாடு செய்வது பற்றி ராஜ்ய சர்க்கார்களுடன் மத்திய சர்க்கார் கடிதப் போக்குவரத்து நடத்திவருவதாக மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார்.

மத்திய உணவு இலாகா துணை மந்திரி ஏ.எம்.தாமஸ், மக்களவையில் இதைத் தெரிவித்தார். மத்திய சர்க்காருடன் கலந்தாலோசித்து, பிஹார் சர்க்கார் நகரப் பகுதிகளில் குடும்ப அடையாள அட்டைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறிப்பிட்ட அளவு தானியம் என நிர்ணயிக்கப்பட்டு அது நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

அடையாள அட்டை முறையினால் நியாய விலைக் கடைகளில் நிகழும் பல ஒழுங்கீனங்களை ஒழிக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேற்கு வங்கத்திலும், ஒரு தினுசான பங்கீடு அமலில் இருக்கிறது என்றும், அரிசி, கோதுமை விநியோகத்துக்கு மற்றப் பிரதேசங்களிலும் அடையாள அட்டை முறையை அமலுக்குக் கொண்டு வரும் விஷயம் சர்க்கார் பரிசீலனையில் இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.