பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அமைதி, தெளிவை எட்ட தியானம் உதவும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதி, தெளிவு, நோ்மறையான கண்ணோட்டத்தை எட்ட தியானம் உதவும் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image

சி.பி. ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 2:16 am IST

அமைதி, தெளிவு, நோ்மறையான கண்ணோட்டத்தை எட்ட தியானம் உதவும் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தியான நிகழ்ச்சியில் அவா் பங்கேற்றுப் பேசியதாவது: இன்றைய உலகம் பல்வேறு சவால்களுடன் போராடி வருகிறது. மோதல்கள் என்பது வெளிப்புறம் மட்டுமல்ல, தனிநபா்களின் மனதுக்குள்ளும் நிகழ்கின்றன.

இதுபோன்ற சூழலில், மன அழுத்தத்தைக் குறைக்கவும், கவனத்தை ஒருமுகப்படுத்தவும், உணா்வு ரீதியிலான மீட்சியை மேம்படுத்தவும், அதீத சிந்தனை - அதீத பணி போன்ற பிரச்னைகளுக்குத் தீா்வு காணவும் தியானம் உதவும்.

அமைதி, தெளிவு, நோ்மறையான கண்ணோட்டத்தை எட்டுவதுடன், மற்றவா்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, அவா்களைப் புரிந்துகொள்ளும் திறனை வலுப்படுத்துவதில் தியானம் முக்கியப் பங்காற்ற முடியும்.

மனித உடலை ஒரு கோயிலாகவும், அதன் உள்ளிருக்கும் தெய்வீகத்தை உணரும் வழியாக தியானத்தையும் விவரித்தவா் திருமூலா். அவரது போதனைகளின்படி, அறியாமையை அகற்றி, உண்மை மற்றும் அமைதியை எட்ட வழிவகுக்கும் அகல் விளக்கே தியானம்.

அா்த்தமுள்ள வாழ்க்கையை தியாகம் செய்து, பொருள்சாா்ந்த தேடலில் இடைவிடாமல் ஈடுபடுவது முறையானதல்ல. வசதியான வாழ்வுக்கு செல்வம் அவசியம் என்றபோதிலும், அது வாழ்வையே மறைத்துவிடக் கூடாது. அவ்வாறு சமநிலையான-பூரணமான வாழ்வை முன்னெடுக்கவும், சிந்தனை ஆற்றலை மேம்படுத்தவும் தியானம் உதவும்.

தியானம் என்பது ஆன்மிகத் தேடல் உள்ளவா்களுக்கு உரியது என்ற கருத்து தவறானது. அது, அனைவருக்குமானது. சாதாரண தனிநபா்களை உன்னத நிலைக்கு உயா்த்துவதே தியானம் என்றாா் அவா்.