சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று - (25.08.1966) - கல்பாக்கம் அணு விசை நிலையம் - இந்திய விஞ்ஞானிகளே வடிவமைத்துக் கட்டுவர்

கல்பாக்கம் அணு விசை நிலையத்தை இந்திய விஞ்ஞானிகளே வடிவமைத்துக் கட்டுவார்கள் என்று அணுசக்தி கமிஷன் தலைவர் டாக்டர் விக்ரம் சாராபாய் கூறினார்.

Updated On :24 ஆகஸ்ட் 2015, 3:23 pm

கல்பாக்கம் அணு விசை நிலையத்தை இந்திய விஞ்ஞானிகளே வடிவமைத்துக் கட்டுவார்கள் என்று அணுசக்தி கமிஷன் தலைவர் டாக்டர் விக்ரம் சாராபாய் கூறினார்.

Story image

பார்லிமென்ட் அணுசக்தி பூர்வாங்க ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கூறியதாவது -

சென்னை அருகே கல்பாக்கத்தில் அணு சக்தி மின்சார நிலையம் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த அணு உலையை இந்திய விஞ்ஞானிகளே வடிவமைத்துக் கட்டுவார்கள். இந்த அணு உலைக்காக பிரெஞ்சு தொழில்நுட்ப ஒத்துழைப்பை இந்தியா ஒருபோதும் கேட்கவில்லை.

இந்தியாவில் தயாரிக்கப்படாத சில இயந்திரங்கள், உறுப்புகள் மூலப் பொருள்களின் இறக்குமதிக்கான அந்நியச் செலாவணிச் செலவை ஈடு செய்வதற்காகப் பிரெஞ்சு சர்க்காரிடமிருந்து விசேஷ கடனுதவியைப் பெறுவதைப் பற்றியே பேச்சுக்கள் நடைபெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.