தவறான முறையில் சேர்க்கப்பட்டதாகக் கண்டுபிடிக்கப்படும் எந்த சொத்தையும் பறிமுதல் செய்வதற்கான நகல் மசோதா அநேகமாகத் தயாராகிவிட்டது என்றும், இந்த மசோதா பார்லிமென்ட்டின் அடுத்த கூட்டத் தொடரில் கொண்டு வரப்படலாம் என்றும் மத்திய அரசாங்க நிதி இலாகா துணை மந்திரி பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.
அரசாங்கம் அமைத்த விசேஷக் கமிட்டி இந்த நகல் மசோதாவை தயாரித்து வருகிறது. தவறான முறையில் சேர்க்கப்பட்ட சொத்தை ஒடுக்க தற்போதைய நிலையில் இச் சட்டம் தீவிர மாறுதலை ஏற்படுத்தும்.
நாட்டில் சிலர் கடத்தல் மூலம், அல்லது தவறான முறையில் சேர்க்கப்பட்ட செல்வத்தின் மூலம் பெரிய தொழில்களை அமைத்துள்ளனர். அவர்கள் மிக உயர்ந்த விகிதத்தில் வருமான வரியும் செலுத்துகின்றனர்.
அவர்களுடைய செல்வம் தவறான முறையில் சம்பாதிக்கப்பட்டதாக அரசு உறுதிப்படுத்திக் கொள்ளுமானால், உத்தேச சட்டமானது அவ்வித செல்வத்தை பறிமுதல் செய்ய வழி வகுக்கும்.
வருமானத்தை மறைப்பதற்கு எதிரான நடவடிக்கையின் ஒருபகுதியாக, வருமான வரி செலுத்துவோரின் வாழ்க்கைத் தரம், செலவு அளவு ஆகியவற்றின் மீது இப்போது கடும் கண்காணிப்பு செலுத்தப்படுகிறது.
வருமான வரி செலுத்தும் ஒருவரின் உண்மையான செலவு விவரம் தெரியாத வரையில் அவருடைய உண்மையான அல்லது மறைக்கப்பட்ட வருமானத்தைக் கண்டறிய முடியாது.
இப் பின்னணியில் அடிக்கடி விமானப் பயணத்துக்காக பணம் செலவு செய்பவர்கள் கவனமாக கண்காணிக்கப்பட வேண்டியவர்களாக உள்ளனர் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தூய்மை நகரத்திற்கான செயல்திட்டத்தை உருவாக்க பசுமை நிதிச் செலவுகளை இணைக்கும் தில்லி அரசு!
நகா்ப்புற போக்குவரத்து துறையில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம்! என்சிஆா்டிசி மற்றும் ஐஐடி ரூா்கீ இடையே ஒப்பந்தம்!

அமைதி, தெளிவை எட்ட தியானம் உதவும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரயில் நீா் ஊழல்: ஆா்டிஐ விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்ய ஐஆா்சிடிசிக்கு உத்தரவு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


