கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அருண் நேரு, வி.சி.சுக்லா, ஆரீப் முகமதுகான் ஆகிய மூவரும் இந்திரா காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். மூவரையும் கட்சியில் இருந்து நீக்கும் உத்தரவை இந்திரா காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி வெளியிட்டார்.
அருண் நேரு, வி.சி.சுக்லா, ஆரீப் முகமதுகான் ஆகிய மூவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தகவலை இந்திரா காங்கிரஸ் பொதுச் செயலாளர் கருப்பையா மூப்பனார் தெரிவித்தார்.
கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக மூவரையும் ராஜீவ் காந்தி, இந்திரா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்கி இருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்தார். மூவரும் எவ்வளவு காலத்துக்கு கட்சியில் இருந்து விலக்கப்பட்டனர் என்ற தகவலை மூப்பனார் தெரிவிக்கவில்லை.
சமீபகாலத்தில் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் வி.பி.சிங் பேசிய பேச்சுக்களினாலும், அவரது நடவடிக்கைகளினாலும் பெரும் விவாதங்கள் எழுந்துள்ளன. அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தீவிரமாக வலியுறுத்தி வருகிறார்கள். ஆனாலும், வி.பி.சிங் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், அருண் நேரு, வி.சி.சுக்லா, ஆரீப் முகமதுகான் ஆகிய மூவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் இந்தியர்கள் சட்டவிரோதமாக பணம் சேர்த்து வைத்திருத்தல், பாதுகாப்பு தளவாட பேரங்கள் தொடர்பான புலனாய்வு நடவடிக்கைகள் தொடர்பாக அருண் நேரு, வி.சி.சுக்லா, ஆரீப் முகமதுகான் ஆகியோர் வி.பி.சிங்கை பொதுப்படையாக ஆதரித்து வந்தனர். மீரட் கலவரம் தொடர்பாக அரசை, ஆரீப் முகமதுகான் கடுமையாக விமரிசனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

234 தொகுதிகளிலும் இரட்டை இலை.. 230 தொகுதிகளில் உதயசூரியன்!

பயனற்று கிடக்கும் குளிா்பதனக் கிடங்கு

கட்சிகளே கொஞ்சம் கவனியுங்கள்! குப்பையோடு குப்பையான திட்டங்கள்!
கோபிசெட்டிபாளையம்... கே.ஏ. செங்கோட்டையனின் வெற்றிப் பயணம் தொடருமா?
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


