மதம் தொடர்பான மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு விரும்புகிறது. ராமஜன்ம பூமி நீங்கலாக, மற்ற வழிபாட்டுத் தலங்களைப் பொருத்தமட்டில், சுதந்தர தினத்தன்று இருந்த நிலையைப் பராமரிக்க சட்டம் கொண்டு வர அரசு தீர்மானித்துள்ளது என்று பிரதமர் நரசிம்ம ராவ் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்துக்கு அவர் பதிலளித்துப் பேசியதாவது -
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை மீண்டும் தனியார் கையில் ஒப்படைக்க மாட்டோம். அது பற்றி உறுப்பினர்கள் கவலைப்படத் தேவையில்லை. அதற்குப் பதிலாக, வங்கித் துறையைச் சீரமைக்க பல நடவடிக்கைகளை அரசு அறிவிக்கும்.
அடுத்த சில நாள்களில் புதிய தொழில் கொள்கையை அரசு அறிவிக்கும். புதிய தொழில் கொள்கையில் தலைகீழான மாற்றங்கள் எதவும் இராது. புதிய கொள்கை, நிதி, பொருளாதாரம், தொழில், வர்த்தக சீர்திருத்தங்களை உள்ளடக்கியதாக இருக்கும். நேருவின் கலப்புப் பொருளாதாரக் கொள்கையில் இருந்து எந்த வகையிலும் அரசு விலகிச் செல்லப் போவதில்லை.
காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு உதவ வேண்டாம் என்று பாகிஸ்தான் அரசை பலமுறை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டோம். பாகிஸ்தானின் போக்கு மாறவில்லை. எனவே, இத்தகைய சூழ்நிலையில்தான் இந்தியா வாழ்ந்தாக வேண்டியுள்ளது. இந்தப் பிரச்னை தொடர்பாக பொதுக் கருத்து ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

234 தொகுதிகளிலும் இரட்டை இலை.. 230 தொகுதிகளில் உதயசூரியன்!

பயனற்று கிடக்கும் குளிா்பதனக் கிடங்கு

கட்சிகளே கொஞ்சம் கவனியுங்கள்! குப்பையோடு குப்பையான திட்டங்கள்!
கோபிசெட்டிபாளையம்... கே.ஏ. செங்கோட்டையனின் வெற்றிப் பயணம் தொடருமா?
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


