மத்தியில் ராம ராஜ்யத்தை அமைக்க பாரதிய ஜனதா கட்சியின் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அயராது உழைக்க வேண்டும் என்று அக் கட்சியின் தலைவர் எல்.கே. அத்வானி அழைப்பு விடுத்தார்.
அவர் மேலும் கூறியதாவது -
வரவிருக்கும் பதினோராவது மக்களைவைத் தேர்தலில் நிச்சயம் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்போம் என்ற உணர்வுடன் நாம் அனைவரும் உழைக்க வேண்டும். நம்முடைய கட்சிக்கு தெளிவான பெரும்பான்மை பலத்தை அளிப்பதென்று மக்கள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டார்கள்.
தேர்தலுக்கான வேலைகள் இப்பொழுதே துவக்கப்பட வேண்டும். நம்முடைய சட்டப்பேரவை உறுப்பினர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பொருத்து மக்களவைத் தேர்தலில் நமக்கு வாக்குகள் கிடைக்கும். நம்முடைய அமைச்சர்களின் நடைமுறை, நமது ஆட்சி நடக்காத மாநிலங்களில்கூட நமக்கு செல்வாக்கை தேடித்தரும்.
ஊழலை ஒழிப்போம், அரசியலை குற்றவாளிகளின் புகலிடமாக மாற்றுவதைத் தடுப்போம், நீதித் துறையில் சீர்திருத்தங்கள் செய்வோம் என்பனவற்றை நாம் தேர்தல் அறிக்கையில் வலியுறுத்துவோம்.
கட்சியின் கொள்கைகளையும் லட்சியங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல, ஸ்வதேசி ஜாக்ரன் மஞ்ச் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆகிய அமைப்புகளுடன் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் இணைந்து செயல்பட வேண்டுகிறேன்.
தேர்தல் முடியும்வரை பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் தங்கள் உறுதியிலும் கட்சி அமைப்புத் தொடர்பான நடவடிக்கைகளிலும் அயராது உழைக்க வேண்டும்.
பாரதிய ஜனதா ஒரு தேசியக் கட்சி. நம்முடைய கண்ணோட்டத்தில் தேசிய வாதம் என்பது கலாசார தேசியவாதம் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

234 தொகுதிகளிலும் இரட்டை இலை.. 230 தொகுதிகளில் உதயசூரியன்!

பயனற்று கிடக்கும் குளிா்பதனக் கிடங்கு

கட்சிகளே கொஞ்சம் கவனியுங்கள்! குப்பையோடு குப்பையான திட்டங்கள்!
கோபிசெட்டிபாளையம்... கே.ஏ. செங்கோட்டையனின் வெற்றிப் பயணம் தொடருமா?
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


