சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று(26.03.1978)தரமான கல்வி புகட்டப்பட, தனியார் பள்ளிகளை ஏற்க அரசு அக்கரை: அமைச்சர் உறுதி

மாநிலத்தில் தரமான கல்வி புகட்டவும் ஆசிரியர்களுக்கு வேலை பாதுகாப்பு அளிக்கவும், நிர்வாக முறைகேடுகளை அகற்றவும் தனியார் பள்ளிகள் அனைத்தையும் அரசு ஏற்று நடத்த அக்கரை கொண்டுள்ளது என்று கல்வி அமைச்சர் அரங்கநாயகம் கூறினார்.

Updated On :25 மார்ச் 2015, 9:33 am

மாநிலத்தில் தரமான கல்வி புகட்டவும் ஆசிரியர்களுக்கு வேலை பாதுகாப்பு அளிக்கவும், நிர்வாக முறைகேடுகளை அகற்றவும் தனியார் பள்ளிகள் அனைத்தையும் அரசு ஏற்று நடத்த அக்கரை கொண்டுள்ளது என்று கல்வி அமைச்சர் அரங்கநாயகம் கூறினார்.

ஆனால், ஆசிரியர்கள் இந்த யோசனையை முழுவதும் ஆதரிக்க வேண்டும் என்றார். ஆசிரியர்களுக்கு வேலை பாதுகாப்பு உறுதி செய்யப்பட இந்த யோசனையை ஆதரிக்குமாறு மத்திய அரசையும் மாநில அரசு அணுகும் என்றார்.

தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர்கள் வேலை பாதுகாப்பு மாநாட்டில் அமைச்சர் அளித்த இந்த வாக்குறுதியைக் கேட்டதும் ஆசிரியப் பிரதிநிதிகள் அனைவரும் கர ஒலி எழுப்பி வரவேற்றனர்.

மைனாரிடி ஸ்தாபனமாக இருந்தாலும் சரி, எல்லா தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் வேலை பாதுகாப்பு அளிக்க அரசு திட்டமிட்டு வருகிறது என்றார் அமைச்சர். மக்கள் வரிப் பணத்தில் இருந்து மான்ய உதவி பெறும் தனியார் பள்ளிகளில் முறைகேடுகள் இருப்பின் அதனை அரசு சகித்துக்கொண்டிராது என்றார் மந்திரி.

எல்லா பள்ளிகளையும் அரசு மேற்கொண்டு நடத்தினால் கல்வித் தரம் பாதுகாக்கப்படும் என்று அரசு உறுதியுடன் நம்புகிறது என்றும், சீக்கிரத்தில் அரசு திட்டமிட்ட முடிவு எடுக்கும் என்றும், ஆசிரியர்களுக்கு வேலை பாதுகாப்பு அளிக்க அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் மந்திரி கூறினார்.

பலவிதமான முறைகேடுகளை அகற்ற மைனாரிட்டி ஸ்தாபனங்கள் உள்பட எல்லா தனியார் பள்ளிகளையும் அரசு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆசிரியர்களுக்கு நேரடியாக சம்பளம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.