தமிழ்நாட்டில் அமைதியான முறையில் வாக்காளர்கள் பயமின்றி வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிப்பதற்கான எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் டைரக்டர் ஜெனரல் கே.ஆர்.ஷெனாய் தெரிவித்தார்.
வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற தேவையான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மண்டல போலீஸ் உதவி என்கிற அடிப்படையில் அண்டை மாநிலங்களில் இருந்து தேவையான போலீஸ் படை தருவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வட ஆற்காடு, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற நக்ஸலைட் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ளவர்களை அடுத்த ஒரு வார காலத்துக்குள் கைது செய்வதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக தேர்தல் மோதல்கள், கலவரங்கள் அதிகரித்து வருவது பற்றி கேட்டதற்கு, இவற்றைத் தவிர்க்க பொது மக்களும் குறிப்பாக அரசியல் கட்சியினரும் போலீஸாருடனும் அரசாங்கத்துடனும் ஒத்துழைக்க வேண்டும். கூடுமான வரையில் தனி நபர் தாக்குதல் அல்லது விமர்சனத்தைத் தவிர்த்தும், வெறியூட்டக்கூடிய பிரசாரங்களைத் தவிர்த்தும் தேர்தல் கூட்டங்களில் பேசுவது அனைவருக்கும் நல்லது.
அத்துடன், அரசியல் கட்சியினர் தங்களுடைய தேர்தல் பிரசாரக் கூட்டங்களை முறையாக வகுத்துக்கொண்டு முன்கூட்டியே போலீஸுக்கு தெரிவிப்பதுடன் முன்னேற்பாடு ஏதுமில்லாமல் திடீர் திடீர் என்று வழியில் கூட்டங்களில் பேசுவதையும் தவிர்க்க வேண்டும். முறைப்படி சுற்றுப் பயண திட்டம் வகுத்துக் கொண்டு குறிப்பிட்ட காலகட்டத்தில் கூட்டங்களை நடத்துவதன் மூலம் தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்தில் வன்முறையில்லை என்ற நல்ல பாரம்பரியத்துக்கு வழிகாட்டியாக ஆக முடியும்.
இதை அனைத்து அரசியல் கட்சியினரும் செய்வார்கள் என்று நம்புவதாக ஷெனாய் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது
சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து

சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


