தமது அரசாங்கத்தை மத்திய அரசு கவிழ்க்குமோ என்று தமக்கு பயமில்லை என்றும், தமக்கு அதுபற்றிய கவலையும் இல்லை என்றும் முதல் அமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் கூறினார்.
மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே எவ்வித தகராறும் இல்லை என்றும், உறவுகள் தொடர்ந்து சுமுகமாகவே உள்ளதாகவும் அவர் கூறினார்.
காங்கிரஸ் (இ) கட்சி ஆழமாகப் புதைக்கப்பட்டுவிட்டதாக தாம் சில தினங்களுக்கு முன் உதகையில் பேசவில்லை என்றும் எம்ஜிஆர் கூறினார். தாம் ஒருபோதும் அவ்வாறு கூறவில்லை என்றும் ஒரு அரசியல் கட்சியை எப்படி ஆழமாகப் புதைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
1967-ம் ஆண்டுக்குப் பின் திராவிட மரபில் வரும் கட்சிகளையே மக்கள் ஆட்சியில் அமர்த்துவதாகவே தாம் உதகையில் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.
உள்பூசல் காரணமாகவே காங்கிரஸ் (இ) கட்சி தமிழகத்தில் வளரவில்லை. உள்பூசலை கைவிட்டால் அவர்களுக்கே நன்மை உண்டு என்றார் அவர்.
தமிழக மந்திரி சபையில் உடனடியாக மாற்றம் எதுவும் இருக்காது. தமிழகம் முழுவதற்கும் பிரதிநிதியாக தாம் உள்ளதாகவும் அவர் சொன்னார். அதனால், மந்திரி சபையை மாற்றி அமைக்க வேண்டிய அவசரம் எதுவும் தமக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.
போலீஸ் டைரக்டர் ஜெனரல் பதவிக்குப் புதிதாக யாரையும் நியமிப்பது பற்றி அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. அதற்கு எந்த அவசரமும் இல்லை என்று எம்.ஜி,ஆர். சொன்னார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது
சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து

சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


