இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண காமன்வெல்த் நாடுகளின் ஆதரவுடன் இலங்கை அரசுக்கும் போராளிகளுக்கும் இடையே ஜெனீவா வகையிலான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற இலங்கையின் தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் லலித் அதுலத் முதலியின் பிரேரணையை இந்திய அரசும், இலங்கைத் தமிழர் குழுக்களும் நிராகரித்தன.
காமன்வெல்த் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் எந்த சமரச முயற்சியையும் இந்தியா ஏற்காது என்று மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் காமன்வெல்த் நாடுகளுக்கோ அல்லது வேறு எந்த சர்வதேச அமைப்புக்கோ எந்தவிதமான தகுதி இருப்பதாக தாம் கருதவில்லை என்று அவர் கூறினார்.
இந்தப் பகுதியில் அமைதியான நிலையான தன்மையும் இருக்க வேண்டும் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை முக்கியமான பிரச்னை என்பதால், இலங்கைத் தமிழர் பிரச்னையில் விரைவில் ஒரு தீர்வு ஏற்பட இந்திய அரசு விரும்புகிறது என்று சிதம்பரம் குறிப்பிட்டார்.
இலங்கைத் தமிழர்களை பொறுத்தவரை இந்திய அரசைத் தவிர மற்ற அமைப்புகளின் மீது நம்பிக்கை இல்லாமல் உள்ளார்கள். எனவே காமன்வெல்த் நாடுகளின் முயற்சியால் இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காணலாம் என்ற இலங்கை அமைச்சர் லலித் அதுலத் முதலியின் யோசனையை இலங்கைத் தமிழர்களோ அல்லது இந்திய அரசோ ஏற்பதற்கில்லை என்று சிதம்பரம் கூறினார்.
இலங்கை அமைச்சரின் யோசனைக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை முன்னணி ஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது
சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து

சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


