தமிழ்நாட்டில் மதுவிலக்கைத் தளர்த்துவதற்காகத் தாம் ரூ.3 கோடி லஞ்சம் வாங்கியதாக கருணாநிதி கூறிவருகிறார். அந்தக் குற்றச்சாட்டை அவர் நிரூபித்தால், முதலில் பதவியில் இருந்தும், அரசியலில் இருந்து தாம் விலகத் தயார் என்று முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் கூறினார்.
இலங்கையில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க இம்மாதம் 15-ம் தேதி சென்னையில் திமுக மறியல் நடத்த திட்டமிட்டுள்ளது.
திமுகவின் மறியல் ஒழுங்கான முறையில் நடைபெறாதென அச்சம் தெரிவித்த அவர், அதனால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை உருவாகலாம் என்றார் அவர். இந்த மறியல் கிளர்ச்சியில் உருவாகக்கூடிய எவ்வித சட்டம் ஒழுங்கு நிலைமைக்கும் திமுக தலைவர் கருணாநிதியே முழுப்பொறுப்பும் ஏற்க வேண்டும்.
அண்ணாதுரை பிறந்த தினமான செப்டம்பர் 15-ம் தேதியன்று எதிர்ப்புத் தினமாக அனுஷ்டிக்கும் கருணாநிதியின் போக்கை அவர் கண்டித்தார்.
இலங்கைத் தமிழர்களின் நலன்களைக் காக்க இயன்ற எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ராஷ்டிரபதியையும், பிரதமரையும் மாநில அரசு கோரியிருப்பதாக முதலமைச்சர் கூறினார். முதல்வர் என்ற முறையில் தம்மால் இயன்ற வரை முயன்றுள்ள தாகவும் அவர் கூறினார்.
இங்கு மேற்கொள்ளக்கூடிய எந்த நடவடிக்கையாலும் இலங்கையில் நிலைமையை மோசமடையச் செய்யக்கூடாது. இலங்கையில் உள்ள தங்கள் சகோதரர்களுக்கு தங்கள் ஒன்றுபட்ட ஆதரவைத் தெரிவிக்கவே ஹர்த்தால் நடத்தப்படுகிறது என்றார் அவர்.
இலங்கையில் தங்கள் சகோதரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டிக்க தமிழ்நாட்டு மக்களுக்கு உரிமை உண்டு என்றார் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குற்றாலம் அருகே தாயைப் பிரிந்த குட்டி யானை மீண்டும் தாயுடன் சோ்ப்பு
ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

காங்கிரஸை எந்தக் காலத்திலும் சேர்க்கக் கூடாது! - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
மணிப்பூரில் இருந்து 132 என்சிசி மாணவர்களை மீட்ட இந்திய விமானப் படை!
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



