மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

15.08.1872 - ஸ்ரீ அரோபிந்தோ பிறந்த நாள்

ஸ்ரீ அரோபிந்தோ ஒரு இந்திய தேசியவாதி, தத்துவஞானி, யோகா ஆசிரியர் மற்றும் கவிஞர் ஆவார்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2016, 2:04 am

DIN

ஸ்ரீ அரோபிந்தோ ஒரு இந்திய தேசியவாதி, தத்துவஞானி, யோகா ஆசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியாவை விடுவிக்க நிகழ்ந்த போராட்டங்களில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பாக பங்குபெற்றவர். அதுமட்டுமின்றி ஆன்மீகம் குறித்த இந்தியாவின் பார்வையில் ஒரு மறுமலர்ச்சி உண்டாக்கியவராகவும அவர் திகழ்ந்தார்.

ஸ்ரீ அரோபிந்தோ கொல்கத்தாவில் 1872 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி பிறந்தவர். ஆரம்பக் கல்வியை இந்தியாவின் டார்ஜெலிங்கிலும், மேற்படிப்பை இங்கிலாந்திலும் பயின்றவர்.அவரது தந்தை அரோபிந்தோ ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இந்திய ஆட்சி பணியில் பணி புரிய வேண்டுமென்று விரும்பினாலும், தாய்நாடு சந்தித்து வரும் அடக்குமுறையை எதிர்த்து போராட விரும்பி இந்தியா திரும்பி விடுதலை போராட்டத்தில் பங்கு கொண்டார்.

சிறிது காலம் காங்கிரஸ் சார்பாக விடுதலை போராட்டத்தில் பங்குபெற்ற பின், ஆன்மீகத்தின் பால் நாட்டம் உண்டாகி, பாண்டிச்சேரி சென்று அங்கே , அன்னை மீராவுடன் இணைந்து ஆசிரமம் அமைத்து ஆன்மீக சேவையில் ஈடுபட்டார்.

1950-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி, தன்னுடையாய் 78-ஆம் வயதில் அரோபிந்தோ மரணமடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.