சரியாக 32 வருடங்களுக்கு முன்பு,இதே நாளில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவினால் பல்லாயிரக்கணக்கான பேர் உயிரிழந்த தினம் இன்று.
மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் அமெரிக்காவைச் சேர்ந்த வாரன் ஆண்டர்சன் என்பவருக்கு சொந்தமான யூனியன் கார்பைடு எனும் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இந்த தொழிற்சாலையில் 03.12.1984 அன்று அதிகாலையில் 'மீத்தைல் ஐசோ சயனேட்' எனும் நச்சு வாயு கசிந்தது.
இந்த விபரீத விபத்தினால் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். உடனடி உயிரிழப்பாக ஏறத்தாழ 2,259 பேர் அந்த வாயுவின் பாதிப்பால் இறந்தனர். அதற்கடுத்த இரண்டு வாரங்களில் மேலும் 8,000 பேர் இறந்தனர். மேலும் 8,000 பேர் இந்த வாயு பாதிப்பின் பின் விளைவுகளால் உண்டான நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்தனர்.
'போபால் பேரழிவு' என்று அழைக்கப்படும் இந்த பேரழிவானது உலகில் உள்ள தொழிற்சாலைகளால் ஏற்பட்ட பேரழிவுகளில் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்திய பேரழிவாகக் கருதப்படுகிறது.
இந்த விபத்தினால் அங்கு ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய 1993 ஆம் ஆண்டு அனைத்து நாடுகளை சேர்ந்த மருத்துவக்குழு ஆணையம் ஒன்று இங்கே ஏற்படுத்தப்பட்டது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது: தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர்!

தொகுதி மறுவரையறை! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


