புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

14.09.1982: பிரபல ஹாலிவுட் நடிகை கிரேஸ் கெல்லி நினைவு தினம் இன்று!

கிரேஸ் கெல்லி ஆஸ்கார் விருது வென்ற ஹாலிவுட் நடிகைளில் ஒருவர்.

News image
Updated On :13 செப்டம்பர் 2016, 7:30 pm

கவியோகி வேதம்

கிரேஸ் கெல்லி ஆஸ்கார் விருது வென்ற ஹாலிவுட் நடிகைளில் ஒருவர். இவர் 12.11.1929 அன்று பிலடெல்பியாவில்பிறந்தவர். இவரது தந்தை ஒரு புகழ் பெற்ற  விளையாட்டு வீரர்; இவரது தாயார் பள்ளி ஆசிரியை.

பள்ளியில் பயிலும்போது ஆடைஅலங்கார அணிவகுப்புகளில்  பங்கேற்றும் நாடகங்களிலும் நடித்து வந்தவர். கல்லூரி படிப்புக்கு பின்னர் அமெரிக்க நாடக அகடெமியில் இணைந்து படித்தவர். பின்பு அப்படியே ஹாலிவுட் படங்களிலும் வாய்ப்பு பெற்று நடிக்கத்  துவங்கினார்.

1950-களில் ஹாலிவுட்டின் புகழ் பெற்ற  நடிகையாக விளங்கினார். 11 திரைப்படங்களில் நடித்த பின்னர் மொனாக்கோ இளவரசர் ரைனரை  திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு விலகினார். அரச குடும்பத்தில் இணைந்த பின்னர் தனியாக அறக்கட்டளையொன்றை உருவாக்கி கலைத்துறையினர் மற்றும் வறுமை நிலையில் உள்ள குழந்தைகளின் நலனுக்கு உழைத்தார். 

இறுதியாக 14.09.1982 அன்று தன்னுடைய 52-ஆவது வயதில் கார் விபத்தில் மரணமடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.