மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

பிப்ரவரி 25:  உலக காசநோய் தினம்

ஒவ்வொரு ஆண்டும் உலக காசநோய் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

DIN

ஒவ்வொரு ஆண்டும் உலக காசநோய் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

கடந்த நூறு வருடங்களாக கொடுமையான இருமலுடன் கடும் வலியைக் கொடுத்து ஆளையே காலி செய்து விடுவது காச நோய். பரவுதல் பற்றியும், அதைத் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மார்ச் 24ம் தேதி, சர்வதேச காச நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது

உலகில் வேகமாக பரவும் நோய்களில் காசநோய் முக்கியப் பங்கு வகிக்கிறது. உலக அளவில் இந்நோயால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளதாக ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. ஒவ்வொரு மூன்று நிமிஷத்துக்கும் 2 பேர் காச நோயினால் இறந்துவிடுகிறார்கள். காசநோய் கிருமியுள்ள சிகிச்சை பெறாத காசநோயாளிகள் இருமும்போதும், தும்மும் போதும் கிருமிகள் காற்றில் கலந்து ஆரோக்கியமாக உள்ளவர்களின் உடலுக்குள் சென்றுவிடுகிறது. அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது இக்கிருமி வேகமாக வளர்ந்து காசநோயின் அறிகுறிகளோடு வெளிக்காட்டுகிறது.

சில மருந்துகள் உதவியால் நோய் தொற்றும் வாய்ப்புள்ளவர்களுக்கு நோய் தொற்றி வராமல் தடுப்பதற்கும், நோய் வந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கவும், நோயிலிருந்து மீளவும் வாய்ப்புகள் இருப்பினும், இந்நோயை முற்றாக வர இயலாமல் செய்வதற்கான வழிமுறைகளை இன்னமும் அறிவியலாளர்கள் கண்டுபிடிக்கவில்லை. இந்நோய் இருமல், தும்மல், உமிழ்நீர் போன்றவற்றிலிருந்து காற்றில் பரவும் தன்மை உடையது. இந்த நோய், குழந்தை முதல் முதியோர் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். நீரிழிவு மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இது வரும் வாய்ப்பு மிகமிக அதிகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.