மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிகேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

பள்ளி ஆய்வக உதவியாளர் பணித் தேர்வு - 2

செல்லின் வெளிச்சுவர் மற்றும் சவ்வினால் சூழப்பட்ட உட்கரு உட்பட நுண் உறுப்புகள் அனைத்தும் கொண்ட செல் - யூகோரியாட்டிக் செல்.

Published On :

*  செல் என்பது உயிரினங்களின் அடிப்படை அமைப்பும், செயல் ஆகும்.

*  செல்லை நுண்ணோக்கியின் (Microscope) மூலம் காணலாம்.

*  தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிரிகளும்  செல்களால் ஆனவை.

*  முதன் முதலில் செல்லைப் பார்த்தவர் - கண்ணாடிக் கடைக்காரரான இராபர்ட் ஹூக்

*  செல்லுலா எனும் இலத்தீன் மொழிச் சொல்லுக்கு ஒரு சிறிய அறை என்று பெயர்.

*  1665 ஆம் ஆண்டு சிறிய அறைக்கு இராபர்ட்ஹூக் செல் என்று பெயரிட்டார்.

*  செல்லுக்குள்ளே ஒரு தனி உலகம் இருப்பதை  கண்டுபிடித்தவர் - இராபர்ட் ப்ரெளன்.

*  பாக்டீரியா சில பாசிகள் போன்றவை ஒரே செல்லினால் ஆனவை.

*  செல்களின் உள்ளே சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லை.

*  சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லாத தெளிவற்ற உட்கரு மட்டுமே கொண்ட செல்லை புரோகேரியாட்டிக் செல் என்று அழைக்கப்படுகின்றனர்.

*  செல்லின் வெளிச்சுவர் மற்றும் சவ்வினால் சூழப்பட்ட உட்கரு உட்பட நுண் உறுப்புகள் அனைத்தும் கொண்ட செல் - யூகோரியாட்டிக் செல். இதனை முழுமையான செல் என்பர்.

*  தாவர, விலங்கு செல்கள் யூகேரியாட்டிக் செல் வகையைச் சார்ந்தவை.

*  தாவர, விலங்கு செல்கள் அவற்றின் பணிகளுக்கு ஏற்ப அளவிலும், வடிவத்திலும் வேறுப்ட்டும், அடிப்படை அமைப்பில் ஒத்து காணப்படுகின்றன.

*  செல்லைச் சுற்றியுள்ள படலம் - பிளாஸ்மா படலம்.

*  பிளாஸ்மா படலத்திற்கு உள்ளே இருக்கும் கூழ் புரோட்டோபிளாசம்.

*  சைட்டோபிளாசம், செல்லின் உட்கரு ஆகிய இரண்டையும் உள்ளக்கியது - புரோட்டோபிளாசம்.

*  புரோட்டோபிளாசத்திற்கு பெயரிட்டவர் ஜே.இ. பர்கின்ஜி.

*  புரோட்டோ என்றால் முதன்மை என்றும், பிளாசம் என்றால் கூழ்போன்ற அமைப்பு என்றும் பொருள்.

*  பிளாஸ்மா படலத்துக்கும் உட்கருவுக்கும் இடைப்பட்ட பகுதி சைட்டோபிளாசம்.

*  கார்போஹைட்ரேட், புரத்தால் ஆனது - சைட்டோபிளாசம்.

*  செல்லின் கட்டுப்பாட்டு மையம் - உட்கரு (நியூக்ளியஸ்)

*  உட்கருவின்  வடிவம் கோள வடிவம்.

*  உட்கருவின் உள்ளே உட்கருச்சாறு,

*  உட்கருச்சவ்வு, உட்கரு மணி, குரோமேட்டின் வகைப்பின்னல் உள்ளன.

*  ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்வது உட்கரு.

*  செல்லின் ஆற்றல் மையம் - மைட்டோகாண்ட்ரியா.

*  உணவு செரிமானம் அடைய நொதிகளைச் சுரப்பதும், லைசோசோம்களை உருவாக்குவது - கோல்கை உறுப்புகள்.

*  கோல்கை உறுப்புகள் தாவர செல்லில் டிக்டியோசோம்கள் என்று அழைக்கப்படுகின்றன.

*  செல்லின் உள்ளே இருக்கும் பொருள்களே ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்வது - எண்டோபிளாச வலை.

*  செல்லின் புரதத்தொழிற்சாலை - ரிபோசோம்கள்.

*  புரதத்தை உற்பத்தி செய்வது ரிபோசோம்கள்.

*  நுண்குழல்கள் போன்ற அமைப்புடையது - லைசோசோம்கள்

*  செல்லைப் பாதுகாப்பது - லைசோசோம்கள்

*  செல்லின் தற்கொலைப் பைகள் - லைசோசோம்கள்

*  விலங்கு செல்லில் மட்டும் காணப்படுவது -  சென்ட்ரோசோம்.

*  உட்கருவிற்கு அருகில் நுண்ணிய குழல் மற்றும் குச்சி வடிவில் இருப்பது சென்ட்ரோசோம்

*  புதிய செல்களை உருவாக்குபவை -  சென்ட்ரோசோம்.

*  வெளிர்நீல நிறுமுடைய குமிழ்கள் - நுண் குமிழ்கள்.

*  சத்துநீரைச் சேமிப்பது, செல்லின் உள்ள அழுத்தத்தை சேமிப்பது, செல்லின் உள் அழுத்தத்தை உள் அழுத்தத்தை ஒரே மாதிரி பேணுவது - நுண்குமிழ்கள்.

*  தாவர செல்லில் சென்ட்ரோசோம் இல்லை.

*  தாவரசெல்கள் அனைத்திலும் செல்சுவர் உள்ளது.

*  விலங்குகளைவிட தாவரங்கள் இறுகி இருப்பதற்குக் காரணம் தாவரசெல்லில் செல்சுவர் இருப்பதாகும்.

*  தாவரசெல்லில் கணிகங்கள் உள்ளன.

*  தாவரசெல்லில் அளவில் பெரிய நுண்குமிழ்கள் உள்ளன.

*  செல்லுக்கு வடிவத்தைத் தரும்வெளியுறை செல்சுவர்.

*  செல்சுவர் செல்லுலோசினால் ஆனது.

*  செல்லின் உள் உருப்புகளைப் பாதுகாப்பது, செல்லுக்கு வடிவம் தருவது - செல்சுவர்.

படித்ததை படிப்பவர்களுடன் பகிர்ந்து கொண்டால் நல்ல நினைவுத் திறனை பெறலாம்.

தொடரும்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.