எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

31 துயர ஓவியங்கள்!

உலக வரலாற்றில் பல காரணங்களுக்காக போர்கள் நடந்திருக்கின்றன. ஓர் இனத்தின் அடையாளத்தை முற்றிலும் அழிப்பதற்கான முயற்சியாக நடந்த போர் என்றால், நாம் வாழும் காலத்தில் கடந்த 30 வருடங்களாக இலங்கைத் தமிழர்களுக்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:50 am

ரவிக்குமார்

உலக வரலாற்றில் பல காரணங்களுக்காக போர்கள் நடந்திருக்கின்றன. ஓர் இனத்தின் அடையாளத்தை முற்றிலும் அழிப்பதற்கான முயற்சியாக நடந்த போர் என்றால், நாம் வாழும் காலத்தில் கடந்த 30 வருடங்களாக இலங்கைத் தமிழர்களுக்கு விடுதலைக்கு எதிராக இலங்கை அரசு நடத்தி முடித்திருக்கும் போர்தான். இந்தப் போரில் விடுதலைப் புலிகளின் வீரம், அவர்களுக்கு கடைசிவரை தோள் கொடுத்த மக்களின் தீரம், அவர்களின் சோகம், அரசுகளின் சதிகள், துரோகங்கள், போராட்டங்கள், தோல்விகள், களிப்புகள், எதிர்கால நம்பிக்கைகள்... என ஈழத் தமிழர்களின் பலவிதமான உணர்ச்சிகளை "போர் முகங்கள்' என்னும் தலைப்பில் ஓவியங்களாக்கியிருக்கிறார் புகழேந்தி.

சென்னை, நுங்கம்பாக்கம் அலையன்ஸ் ஃபிரான்கைஸ் அரங்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் புகழேந்தியின் ஓவியங்களை ஆகஸ்ட் 31 வரை காணலாம். ஓவியர் புகழேந்தி அரசு கவின்கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியிலிருப்பவர். இதற்கு முன் "புயலின் நிறங்கள்' என்னும் தலைப்பில் 1984 முதல் 2006 வரை நடந்த தமிழீழ விடுதலைப் போரின் நிகழ்வுகளின் தொகுப்பாக 27 ஓவியங்களை வரைந்திருந்தார். இந்த ஓவியங்கள் ஈழத்தில் 15 இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டன. ஆஸ்திரேலியா ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அதன்பின், 2009-ல் ஈழத்தில் நடந்த இறுதிப் போர் நிகழ்வுகளின் தொகுப்பாக "உயிர் உறைந்த நிறங்கள்' என்னும் தலைப்பில் 22 ஓவியங்களை வரைந்திருந்தார்.

கண்காட்சியில் இடம்பெற்றிருக்கும் 31 ஓவியங்களும் 30 ஆண்டுகால போரின் கோர முகத்தைக் காட்டுவதாக இருந்தன. ஒவ்வொரு கோட்டோவியமும் வார்த்தைகளுக்கு மீறிய வலியைச் சொன்னாலும், ஒவ்வோர் ஓவியத்திற்கும் உரிய கவிதை வரிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த வரிகளைப் படிக்கும் போது ஓவியத்துடனான நெருக்கம் நமக்கு இன்னும் அதிகரிக்கிறது. கவிதை வரிகளை இந்தக் கண்காட்சி ஓவியங்களுக்கென்று பிரத்யேகமாக எழுதியிருப்பவர்கள் கவிஞர் காசிஆனந்தன் மற்றும் கவிஞர் இன்குலாப் ஆகியோர். அந்த உணர்ச்சிக் கவிஞர்களின் பெயர்களையும் கவிதைகளுக்குக் கீழே போட்டிருக்கலாம்!

போராளிகளுக்கிடையேயான இளைப்பாறுதல், பாசம், முள்வேலிக்குப் பின்னே இருந்தாலும் அவர்களின் கண்களில் நம்பிக்கை வெளிச்சம் தெரிகிறது புகழேந்தியின் ஓவியம் மூலம். இதை உணர்த்தும் வகையில் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த ஒரு கவிதை:

முள்ளி வாய்க்காலும்

முடிவல்ல

முள் வேலிக் கம்பியும்

முடிவல்ல...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.