கிண்ணஜாலங்கள்!
மயிலாப்பூரில் ஆர்கே கன்வென்ஷன் மைய அரங்கில், ஜலதரங்கம் கச்சேரி நடக்க உள்ளது என்ற செய்தி நம் காதுகளை எட்டியது. சென்று, கண்டு, கேட்டுக் களித்தோம். மேடையை அலங்கரிக்க பல அளவிலான பீங்கான் கிண்ணங்கள், வாசிப


மயிலாப்பூரில் ஆர்கே கன்வென்ஷன் மைய அரங்கில், ஜலதரங்கம் கச்சேரி நடக்க உள்ளது என்ற செய்தி நம் காதுகளை எட்டியது. சென்று, கண்டு, கேட்டுக் களித்தோம். மேடையை அலங்கரிக்க பல அளவிலான பீங்கான் கிண்ணங்கள், வாசிப்பவர் பின்புறத்தில் பக்கெட்டில் தண்ணீர். தனக்குள்ள அபார ஞானம் அவருக்குக் கட்டளையிட ஒவ்வொரு கிண்ணத்திலும் நீரை முழு கவனத்துடன் ஊற்றிக் கொண்டிருந்தார் 1993ன் கலைமாமணி, ஆனையாம்பட்டி கணேசன். நிகழ்ச்சிக்குப் பின் அவருடன் உரையாடியவற்றிலிருந்து...
""இதில் விஷயம் என்னன்னா, பாட்டுக் கேட்பவர்களுக்குப் பாட்டாக, சாஹித்யமாகக் கேட்கணும். இது போன்ற தொடர்ச்சி இல்லாத வாத்தியங்களில் மொழியைக் கொண்டு வருவது அவ்வளவு சுலபமில்லை. நீங்க காதால இப்ப கேட்டதில சாஹித்ய பாவம் இருந்ததா?
கண்ணை மூடிக்கொண்டு வாசித்துவிட முடியாது. இன்றைக்கு நான் வாசித்த ஹம்ஸத்வனிக்கு (வாதாபி கணபதிம்) என்ன ஸ்வரம் வரும், அடுத்து வந்த ஆபோகிக்கு என்ன ஸ்வரம் என்று பார்த்து, இந்தப் பீங்கான் கிண்ணங்களை மாற்றவும் அவற்றில் உள்ள தண்ணீரின் அளவை தேவைக்கு ஏற்றபடி குறைக்கவோ, கூட்டவோ வேண்டும். ஏதோ கிண்ணங்கள் என்று புரிந்து கொள்ளாதீர்கள் இவற்றின் வயது 100 க்கு மேல். எந்த விரிசல் இல்லாமலும், விரலால் தட்டிப் பார்த்து ஸ்வரத்திற்குச் சமமாக இருக்கிறதா என்றும், உகந்த அளவு தண்ணீர் நிரப்பிய பின் வரும் நாதத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து வாங்கிக் கொள்ளணும். சீதோஷ்ண நிலையினால் பாதிக்கப்படும் தண்ணீரின் டெம்பரேச்சர், உபயோகிக்கும் ஜலத்தின் தரம் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டியது எங்கள் கடமை. இந்தப் பிரச்னை வெளிநாடுகளுக்கு, குறிப்பாகக் குளிர் பிரதேசங்களுக்குச் சென்று வாசிக்க நேரும் பொழுது நான் எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கிறது.
செட் பண்ணி முடித்து, கச்சேரி ஆரம்பிப்பதற்கு ஒரு பத்து பதினைந்து நிமிடங்களாவது ஆகும். கச்சேரி முடிந்த பின்னும் மேடையை, கிண்ணங்களையும் துடைப்பது என்று எங்களுக்கு முன்னும் பின்னும் வேலை உண்டு. தட்டுவதற்கான குச்சிகள் மெலிதான பாந்தத்துடனும் கனமான திடத்துடனும் இருக்கும். முதல் கிண்ணம் முதல் கடைசி கிண்ணம் வரை துரித காலம் வாசிக்க ஒன்று என்றால், ஆழ்ந்த லயிக்கும் ஸ்வரங்கள் வாசிக்க உதவும் குச்சிகள் வேறு. பாட்டு அல்லது ஆலாபனை முடிகிறபோது விரல்களாலேயே கப்களை வருடி நாதத்தை அழகுணர்ச்சியோட நிர்வாகம் பண்ணி வாசிப்பதும் ஒரு தனி கலை. இன்னொரு விஷயம். அமரும் மேடை, கான்க்ரீட் மேடையா, அல்லது மரத்தினாலானதா என்பதைப் பொருத்து வெளிவரும் நாதமும் வித்தியாசப்படும். எனக்குப் பெரிதளவில் கச்சேரிகள் வர்றதில்லை என்று நான் ரொம்பக் கவலைப்படுவது இல்லை'' என்றார் அதே நிதானத்துடன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...