ஓவிய இசை!
இந்தியாவின் கலாசாரத் தலைநகரம் சென்னை என்பதை நிரூபிக்கும் வகையில் உலகம் முழுவதும் தன்னுடைய கவனத்தை ஈர்த்து வருகிறது சென்னையில் நடக்கும் இசைவிழா. ஆனால் அதே இசை விழாவை முன்னிட்டு சென்னை, ஆழ்வார்பேட்டையில


இந்தியாவின் கலாசாரத் தலைநகரம் சென்னை என்பதை நிரூபிக்கும் வகையில் உலகம் முழுவதும் தன்னுடைய கவனத்தை ஈர்த்து வருகிறது சென்னையில் நடக்கும் இசைவிழா. ஆனால் அதே இசை விழாவை முன்னிட்டு சென்னை, ஆழ்வார்பேட்டையிலிருக்கும் "ஸ்டுடியோ பலோúஸô' ஆர்ட் கேலரியில் கடந்த மாதத்தின் இறுதிவரை நடந்த ஓவியக் கண்காட்சியை இத்தனை இசை ரசிகர்கள் இருந்தும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. மீடியாக்களின் கவனமும் அதன் மேல் திரும்பவில்லை. புகழ்பெற்ற ஓவியர் தீபக் ஆர். படேலின் கைவண்ணத்தில் உருவான இசைக் கலைஞர்களின் ஓவியக் கண்காட்சிதான் அது. இந்திய அளவில் இசையால் எண்ணற்ற ரசிகர்களை தன்வயப்படுத்திய இசைக் கலைஞர்களின் உருவங்களை தத்ரூபமாக நம் கண் முன் கொண்டுவந்திருந்தார் ஓவியர் தீபக்.
"இப்படியொரு கண்காட்சியை வைக்கவேண்டும் என்ற யோசனை எப்படித் தோன்றியது? நம் ஊரிலேயே நிறைய ஓவியர்கள் இருக்க, வட இந்தியாவில் இருக்கும் தீபக்கைத் தேர்ந்தெடுத்தது ஏன்? என்று கேள்விகளை அடுக்கினோம், ஓவியக் கூடத்தின் நிறுவனரான சித்ரா ராகுலனிடம்.
""இங்கிருக்கும் பல ஓவியர்களுக்கு நேரம் இல்லை. தீபக்கின் ஓவியக் கண்காட்சியை ஒருமுறை ஹைதராபாத்தில் நான் பார்த்தேன். அதில் ஓர் ஓவியம் என்னைப் பெரிதும் கவர்ந்தது. குழந்தைகள் மனசளவில் தன்னை பெரிய மனிதர்களாகக் காட்டிக் கொள்வதற்கு ஏதாவது காரணங்களைக் தேடிக்கொண்டே இருப்பார்கள். ஒரு சிறுமி தன்னுடைய தாயின் பெரிய ஆடையை உடம்பில் சுற்றிக்கொண்டு முகத்தில் குறும்புப் புன்னகையுடன் அமர்ந்திருக்கும் ஓவியம்தான் அது. அதில் தெரிந்த நேர்த்திதான், என்னை இசைக் கலைஞர்களின் ஓவியங்களை அவரிடமே வரையச் சொல்லலாமே என்னும் எண்ணத்தை என்னிடம் ஏற்படுத்தியது. அவருக்கும் இசையில் பெரிதாக ஆர்வம் இருப்பதால் உடனே சம்மதித்தார். அவர் சில வட இந்திய இசைக் கலைஞர்களின் ஓவியங்களை ஏற்கனவே வரைந்திருந்தார். தென்னிந்தியாவைச் சேர்ந்த பல இசை மேதைகளின் பெரிய அளவிலான போட்டோக்களை அவரிடம் சேகரித்துக் கொடுப்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன். இவ்வளவு சிரமப்பட்டு வைத்த கண்காட்சியைப் பற்றிய விளம்பரப் பலகைகளை இசை விழாக்கள் நடக்கும் பிரபல சபாக்களில் வைப்பதற்குக் கூட நிறையப் பேர் மறுத்துவிட்டனர். அதனால் இசைத் துறையிலிருக்கும் பலருக்கும் இப்படி ஒரு கண்காட்சி நடக்கிறது என்ற விவரமே தெரியாமல் போய்விட்டது. அதுதான் வருத்தம்...'' என்றார்.
படே குலாம் அலிகான், ஹரிபிரசாத் செüராஸியா, டி.என்.ராஜரத்தினம், ரவிஷங்கர், பிஸ்மில்லா கான், அம்ஜத் அலிகான், அரியக்குடி, பீம்சென் ஜோஷி, எம்.எல்.வி., செம்மங்குடி, ஜாகீர் உசேன், எம்.எஸ். சுப்புலட்சுமி, லால்குடி, எம்.டி.ஆர்.,விக்கு விநாயக்ராம்.... என இசைப் பிரபலங்கள் நம்முடன் உயிர்ப்புடன் நின்றனர் கண்காட்சியில். அதிலும், நாட்டிய மேதை பாலசரஸ்வதியின் ஓவியம் நம்மை மெய்மறக்க வைத்தது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...