சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கருத்தைக் கவர்ந்த கருத்தரங்கம்

ஒரு சில கல்லூரிகள் பட்டப்படிப்புகளில் இசையையும் ஒரு பாடமாகப் பயில வசதி அளிக்கிறது. முதுகலை (எம்.ஏ), ஆராய்ச்சி (பி.ஹெச்டி), போன்ற உயர் படிப்புக்களை இசையில் கற்க வழி தரும் கல்லூரிகளில் குறிப்பிடத்தக்க ஒ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:31 am

ஒரு சில கல்லூரிகள் பட்டப்படிப்புகளில் இசையையும் ஒரு பாடமாகப் பயில வசதி அளிக்கிறது. முதுகலை (எம்.ஏ), ஆராய்ச்சி (பி.ஹெச்டி), போன்ற உயர் படிப்புக்களை இசையில் கற்க வழி தரும் கல்லூரிகளில் குறிப்பிடத்தக்க ஒன்றுதான், கோவையில் உள்ள அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம். இதில் இசைத்துறை, சுவையான கருத்தரங்கம் ஒன்றை கடந்த திங்கட்கிழமையன்று நடத்தியது. இந்தக் கல்லூரி வளாகத்திலேயே நாள் முழுதும் நடந்த இந்த நிகழ்ச்சியில், தென்னகம் முழுவதிலிருந்தும் சுமார் 65 ஆராய்ச்சிக் கட்டுரைகள் அனுப்பி ஏற்றம் அளித்தனர் ஆய்வாளர்கள்.

மும்மூர்த்திகள். தேவார மூவர், தமிழ் மூவர் இவர்களின் க்ருதிகளில் காணப்படும் சமுதாய மேம்பாட்டிற்கான கருத்துக்கள் என்கிற ஒரு உபயோகமான, மனிதனுக்குத் தேவையான தலைப்பை அளித்திருந்தது அவினாசி லிங்கம் இசைத்துறை.

சுமார் பதினைந்து ஆராய்ச்சி மாணவர்கள் அன்று நேரில் வந்து தமது படைப்புகளைப் பற்றி விளக்கி விவாதித்து கலந்துரையாடியது நிகழ்ச்சிக்கு சுவை சேர்த்தது. முறையான, நெறியான வாழ்க்கை நடத்த மும்மூர்த்திகள் கூறிய அறங்கள், நோய் தீர்க்கும் திறன் கொண்ட க்ருதிகள், புண்ணிய ஸ்தலங்களில் புதைந்து கிடக்கும் ஸ்தல வரலாறுகள், மும்மூர்த்திகளின் பாடல்கள் உடலுக்கும் மனதுக்கும் தரும் மேன்மை, உளவியலும் இசை மூவர்களும் போன்ற தலைப்புகளில் பல ஆழமான தகவல்களைத் தந்தனர் பங்கு பெற்ற ஆய்வாளர்கள்.

சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் மதுரை இசைக் கல்லூரி முதல்வர் டாக்டர் லதா வர்மா. ஒவ்வொருவரின் பேச்சின் முடிவிலும் குறை நிறைகளை மிகவும் நேர்த்தியாக விவாதித்தார். நாள் முழுவதும் நடந்த நிகழ்ச்சியை இன்முகத்துடன் நடத்திச்சென்ற இசைத்துறை தலைவர் பேராசிரியை டாக்டர் ஜனகமாயா தேவியின் கருத்தில் உதயமான இந்தக் கருத்தரங்கம் பயனுள்ளதாக அமைந்தது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. 65 ஆய்வாளர்களின் படைப்புக்களை ஒரு புத்தகமாக வடிவமைத்து அன்று வெளியிட்டனர்.

இந்த நிகழ்வுக்கு பின்புலமாக நின்று உதவிய ஆராய்ச்சி நெறியாளர் பேராசிரியர் சந்தான கிருஷ்ணன், இதன் வெற்றியைப் பாராட்டினார்.

தொடரட்டும் இத்தகைய முயற்சி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.