ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள்
அமைதியாகக் கரையை முத்தமிடுவதும்
மிதந்து வரும் கப்பல்கள்
தரைத் தட்டி நிற்பதும்
கடல் அலைகள், கப்பலுக்கும்
கடற்கரையே எல்லைக் கோடு !
எல்லைக் கோடு தாண்டினால்
தொல்லைகள் வந்து சேரும்
நாடறிந்த இராம காவியம்
உலகுக்கே உணர வைத்தது
சீதைக்கு இளையவர் கிழித்தக்கோடு
எச்சரிக்கை எல்லைக் கோடு !
சுற்றி வரும் கோள்கள்
சுடர் விடும் விண்மீன்கள்
வர்ணஜாலம் காட்டும் வானவில்
வட்டமிடும் வல்லூறுக்கும்
வானமே எல்லைக் கோடு !
எல்லை மீறும் விளையாட்டு
தொல்லை துயரம் கொடுக்கும்
நாடு நகரம் இழக்க வைக்கும்
இதிகாசம் அன்றே உணர்த்தியது
பாரதப்போரே எடுத்துக் காட்டு !
வளைந்து ஓடும் நதிக்கும்
துள்ளி ஓடும் மீன்களுக்கும்
நதிக்கரைகளே எல்லைக் கோடு !
சாலை விபத்தினைத் தவிர்க்க
சாலையில் காணப்படும் கோடுகளே
வாகன ஓட்டிக்கு எல்லைக் கோடு !
ச ரி க ம ப த நீ.... ஏழுசுரமே
சங்கீதத்துக்கே எல்லைக் கோடு !
‘நாம் இருவர் நமக்கு இருவர்’
நம் வாழ்வுக்கு எல்லைக் கோடு
வகுத்துக் கொண்டு வாழுங்கள்
வாழ்ந்து பாருங்கள்
சுமையான சோகம் கூட
சுகமாகத் தோன்றும் !
காதலுக்குத் திருமணம்
மோதலுக்கு மரணம்
பக்திக்குச் சரணம்
நினைத்துப் பார்த்தால்
எல்லாமே எல்லைக் கோடுகள் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நெல், கரும்பு கொள்முதல் விலை உயா்த்தப்படும்! - அன்புமணி பேச்சு

ஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கியது சீனா!
நாட்டை துண்டிக்க முயலும் சமூக விரோத குழுக்களுக்கு திரிணமூல் ஆதரவு! பிரதமா் மோடி குற்றச்சாட்டு!

உளுந்தூா்பேட்டை அருகே தனியாா் சொகுசுப் பேருந்து விபத்து: 20 போ் காயம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

