எல்லைக்கோடு : இராஜபாளையம் மு.ஆனந்த்

Updated on
1 min read

பிறவிப்பயனை அடைந்த மகிழ்ச்சியில்
தோட்டத்தில் பூத்த மல்லிகைப்பூ
ஒய்யாரமாய் உன் தலையில் !!!
 
சுருண்ட முடி கூந்தல்,நெற்றியில் வட்ட பொட்டு,
காதில் வெள்ளி தொங்கட்டம்,
கழுத்தில் தங்கச்சங்கிலி,
கையிலோ வைர வளையல்,மோதிரங்கள்
இரண்டும் உன் விரல்களில் சிணுங்க !!!
 
பட்டு புடவைகட்டி
பண்பாக நடைபோட்ட
பச்சை தமிழச்சியே !!!
 
பண்பாடு மாறாமல் நீ கட்டி
வந்த புடவையை காற்றில்
பறக்கவிட்டுவிட்டு
பச்சிளம் குழந்தையை
போல் கிழிந்த கால்சட்டை,
மேல்சட்டையோடு வந்து நிற்பது
நியாயம் தானோ ???
 
கண்டாங்கி சேலையில் உன்னை வணங்க
எழும்பிய அவனின் கைகள் கிழிந்த
உன் கால் சட்டை மேல்சட்டையை
தீண்டி பார்த்திட வக்கிரமாய்
அருகில் வருவது தெரியவில்லையோ ???
 
அடி மாயவரத்து மயிலே பண்பாடாய்
நாம் உடுத்திய பாரம்பரிய உடையை
எடுத்து போடு அதுவே வக்கிரவாதிகளுக்கும்
உனக்குமான எல்லைக்கோடு !!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com