தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

வழிதவறிய பயணங்கள்: கே. அசோகன்

Updated On :14 நவம்பர் 2016, 10:57 am
மதுவெனும் போதைக்குள் மயங்கிமாளாத துன்பத்தை ஏற்றிடுவார்இது ”தகுமோ” என்றே கேட்டிடின்இன்பம் இதில்தான் என்றிடுவார்!புதுப்புது தத்துவங்கள் உதிர்த்தேபொழுதினை விணாக போக்கிடுவார்பதமாக சொன்னாலும் பாராமலேபோதையிலே தள்ளாடி நின்றிடுவார்இல்லத்தில் ஏழ்மையும் குடியிருக்கஎனக்கென்ன என்றே இயம்பிடுவார்வெல்லமாய் இனிக்கின்ற மழலையின்வெள்ளந்தி சிரிப்பினை தவிர்த்திடுவார்நல்உள்ள நண்பர்கள் நட்பினையேநன்றாகத்தான் வெட்டியே விட்டிடுவார்கல்லறையின் வழிதேடி கணக்காககால்வைப்பார்  வழிதவறிய பயணமாய்சாராய வாடையிலே மிதப்பவருக்குசந்தனமும் சாக்கடையும் ஒன்றேதான்ஓராயிரம் வார்த்தைகள் உரக்கவேஉரைத்தாலும் காதுக்குள் ஏறவே ஏறாதுதீராத நோய்களை தானாகவேதேடித்தான் உடலுக்குள் சேர்த்திடுவார்!சீர்பாதை செல்லாமல் சீரழிந்தேசென்றிடுவார் வழிதவறிய பயணங்களாய்!                                    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.