செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

செல்லாக் காசு: கு. நா. கவின்முருகு

Updated On :21 நவம்பர் 2016, 11:55 am
சந்தைப் பொருளோ எம்மக்கள் மானந்தான்    சட்டை போலே உரித்திடவோ காசுக்காய்விந்தை சொல்வே னிவர்களாலே ஈனராகி   வீழ்ந்து போக செல்லாத காசுமாகி!மந்தை மாடாய் மாறிவிட்ட அவலமேனோ  மான மிழந்து வாழ்வதுதான் வாழ்வாமோநிந்தை கொள்வார் வாழ்வியலில் பணத்தையொன்றே  நெஞ்சு பதைக்க உடல்கூசா மனிதராவர். பெற்று வாழ காசாகின் உழைத்துப்பார் பேரும் கெட்டு மஞ்சமேறல் பாவங்கள்சுற்ற மோடு காதலாகிக் கைப்பிடித்து  தூய வளாகி துணையுடனே வென்றிடுவாய்முற்ற மில்லா வாசலுக்கோ அழகில்லை  முத்தம் சேரா உதட்டிற்கும் வாழ்வில்லைகற்ற நல்ல கல்வியாலே அறிந்திடுக  காப்பி யங்கள் இலக்கியங்கள் சொல்வதென்ன!செல்லாக் காசு என்றபெயர் வந்திடுமே  தேசம் தூற்றும் இழிசொல்லா லென்றென்றும்சொல்லால் உண்மை பேசுவதாய் பொய்சொல்ல  துண்டம் செய்தாய் மனத்தைநூறாய் பணத்திற்காய்நில்லா நிலையாய் உன்மனதும் ஓடிடுதே  நெஞ்சந் தேடும் பொருளாலே பயனுமேதுகொல்லும் திறனை கற்றறிந்தாய் பலரோடு  கொண்ட காசும் செல்லாது அவ்வுலகில்.!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.