ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

செல்லாக் காசு: சசி எழில்மணி

Updated On :21 நவம்பர் 2016, 3:16 pm

ஊர்முழுதும் சுற்றிவந்து
உலகினையே ஆளுது
இருப்போருக்கும் இல்லார்க்கும்
சட்டத்தையே மாற்றுது
பணமிருந்தால் போதுமென்ற
எண்ணத்தையே வளர்க்குது
அன்பினையும் பண்பினையும்
அடியோடு அறுக்குது
நைந்து கிழிந்து கிடந்தாலும்
செருக்கோடு கிடந்தது
காலங்கள் மாறிட
மதிப்புகளும் மாறுது
உச்சத்தில் இருந்தது
மிச்சமாய் கிடக்குது
பாதாளம் பாய்ந்ததும்
பயனற்று இருக்குது
என்கை வரமறுத்த
இன்றைய செல்லாக் காசு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.