செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

செல்லாக் காசு : வேலூர். மூ.மோகன்

Updated On :21 நவம்பர் 2016, 11:59 am
சிறுகச்சிறுக சேர்த்தது  ஓரிரவில்வெறும் செல்லாக்காசாய் ஆனது!கடுகு-டப்பா அழுக்கு நோட்டும்'க்யூ'வில் நிற்கப் போனது!வாழ்நாள் சேமிப்பை 'புதுசா'க்கிடவங்கிக் கணக்கில் போடணுமாம்;வங்கியே கண்டிராத வறியவனுக்குவழியை யார் காட்டுவார்?எந்தப் புற்றில் எந்தப் பாம்போ...?யாருக்கும் எதுவும் புரியல்ல!சந்தடியில்லாக் 'கறுப்பு-முதலைகள்'சிறிதும் கலங்கினதாய் தெரியல்ல!'கறுப்பு'டன் 'கள்ள'ப்பணம் சிறிதேனும்ஒழிந்திட நாமும் கைகோர்க்கணும்;அதற்காக வயிறுமா ஐம்பது நாள்'உண்ணா-நோன்பு' இருக்கணும்?திமிங்கிலத்துக்கு விரித்த வலையில்*'சென்னாக்குன்னி'கள் மாட்டுது!தினமொரு சட்டத்தால் அரசு'தினக்கூலி'யை வாட்டுது!( *ஒருவகை சிறிய மீன்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.