/
பொங்கலுக்காகப் பரணில் கிடந்த பழைய பொருட்களை ஒதுங்கவைத்துக் கொண்டிருந்தபோதுதுருப்பிடித்த ஒருபழைய டிரங்க் பெட்டிக்குள் அந்தசுருக்குப்பை கிடைத்தது...அப்பொழுது யாரும் அக்கறையோடு கண்டு கொள்ளாத,பாட்டி கடைசி வரை தன் இடுப்பிலேயேவெள்ளைப் புடவைக்குள் சொருகிப்பாதுகாத்து வைத்திருந்த பை அது...இறுகிப்போயிருந்த சுருக்குக் கயிற்றைப்பிரயத்தனப்பட்டு இழுத்துத் திறந்ததும்,உள்ளே பல்லாண்டுகளாய்அடைபட்டுக் கிடந்த எராளமான செல்லாக் காசுகள்‘கலகல’வென தரை முழுக்கச் சிதறிஉருண்டோடின...நடுவில் ஓட்டையோடு செம்பினாலானஅணா காசுகள் நிறைய...தவிரவும் சிறிய சதுர ஒரு பைசா, ஐந்து பைசாக்கள்,விளிம்பில் அழகான வளைவுகளோடுஇரண்டு, பத்து, காசுகள்..கருப்பாய் அழுக்குப் படிந்து,சுரண்டினால் உள்ளே மஞ்சள் நிறத்தில்மறைந்திருக்கும் தாமரை மலரோடு பித்தளை இருபது பைசாக்கள் ..எல்லாமே இன்று செல்லாக் காசென்றாலும்,இவைகளும்,ஏதோ ஒரு காலக் கட்டத்தில்,மதிப்போடுதான் இருந்திருக்கும்....பாட்டி எனக்காகக் கூடஅவற்றை அக்கறையோடு சேமித்துப் பாசமாய் பாதுகாத்திருக்கலாம்..இருந்த வரையில் யாரும்,கண்டு கொள்ளவேயில்லை..படுக்கையிலிருந்த பாட்டியைப் போலவேஅவரது இடுப்பில் செருகியிருந்த இந்த சுருக்குப் பையையும்..!சிதறி ஓடியவைகளையெல்லாம் பொறுக்கிஉள்ளே போட்டு,மீண்டும் சுருக்குக் கயிற்றை இழுத்து மூடிய போது,ஏனோ ரொம்ப கனமாய் இருந்ததுமனமும்,பாட்டியின் அந்த பழைய சுருக்குப்பையும்..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

