/
பாயினிலே அமர்ந்துதொலைக் காட்சி கண்டோர் பதறிடவே வந்ததிந்தச் செல்லாச் செய்திமாயிருள்தான் சூழவரும் இரவுப் போதில் மக்களெல்லாம் ஒருநொடிக்கள் பிச்சை யானார்வாயிருந்தும் பசியிருந்தும் உணவி ருந்தும் வந்தநோயால் சுவைக்கதடை யான போலஆயிரமாய் ஐந்நூறாய் பணமி ருந்தும் அதைகொடுத்துப் பொருள்வாங்க முடிய வில்லை !அன்றாடக் காய்ச்சியர்தாம் ஓரி ரண்டாய் அவர்கையில் இருந்ததாளை மாற்று தற்குத்தன்கூலி பணிவிடுத்து வங்கி முன்னால் தலைகொதிக்க நின்றார்கள் வரிசை தன்னில் !தன்வீட்டுள் கணக்குதனைக் காட்டி டாமல் தரைக்குள்ளே கோடியாகப் பதுக்கி வைத்தோர்ஒன்றுமிங்கே நடவாத தன்மை யாக ஒருவருமே வரவில்லை மாற்று தற்கே !பண்டமாற்று முறையென்று புத்த கத்தில் படித்ததினை நேரினிலே கண்டா ரின்றுபண்டங்கள் வாங்கியப்பின் சில்ல றைக்காய் பணத்தாளாய் வெற்றுத்தாள் ஆன தின்று !பெண்கள்தாம் கணவனுக்குத் தெரிந்தி டாமல் பெட்டிக்குள் சேர்த்துவைத்த சிறுவா டெல்லாம்கண்முன்னே வந்திடவே1 பணக்கா ரர்கள் கண்மறைத்த பணம்மீண்டும் மறைந்த தெங்கோ !செல்லாத காசாக ஆக்கி விட்டால் செல்லவைக்க கறுப்புவரும் எனநி னைத்தார்எல்லோர்க்கும் பெப்பெப்பே என்றாற் போல எடுத்ததனைப் பொன்நிலமாய் மாற்றி வைத்தார் !செல்லாது காசென்று செய்த போல செய்யவேண்டும் தங்கத்தை நிலபே ரத்தைபொல்லாத கறுப்புகள்ளப் பணமெல் லாமே பொதுமக்கள் பணமாகி உயரும் நாடே !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
57 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

