/
கையில்விளக்கை ஏந்திக்கொண்டு காரிருளத் தேடுவோர் கபோதிகள் எனமக்கள் கருதுவதில் தவறுண்டோ ?மெய்யானக் கருப்புப்பணம் வெளிநாட்டில் இருக்கையில் மேதையென அதைமுதலில் கொண்டுவர முயலட்டும் !பொய்யான இடந்தனிலே புதையல்தன்னைத் தேடுவோர் புல்லர்களே என்றாவதும் புரியாதோ மோடிக்கு ?செய்முறையில் தீர்க்கமில்லை திறமையில்லை மோடிக்கு சிரிக்கின்ற வகைதன்னில் செய்ததெலாம் கொடுமையே!புதையல் இருக்கின்ற இடத்தினை விட்டிட்டு புல்லர்கள் எங்கெங்கோ அலைந்திட முடிவாய்எதையவர் பலனெனக் கண்டெடுத் திடுவார், இன்னல்கள் தானன்றி வேறெதைக் காண்பார் ?இதையென்றும் உணர்ந்திடா திருந்திட்டு மோடி இன்னாடு தனையவர் எங்ஙனம் ஆள்வார் ?பதைபதைத் தின்றெங்கும் அலைகின்ற தெல்லாம் பாமர மக்களே தானென்ப துண்மை !புதையல்தன்னைக் கண்டெடுக்க புறப்பட்ட மோடியின்றுஎதைத்தான் கண்டிட்டான் இதுவரையில் ?--- சிதைந்ததும்அன்னவனின் பெயரென்பேன், அத்தனையும் பொய்யாச்சு;மன்னிக்கார் இன்னாட்டு மக்கள் !பொல்லாத மோடியின் ஆட்சி --- கருப்புப்பண புதையல்தனைத் தேடித் தேடியேஇல்லாத இடங்களில் எல்லாம் --- வீணாய் இன்றலையக் காண்பதும் மடமை !செல்லாதினி என்றறி வித்த --- வேண்டா சிறுபிள்ளைச் செயலால் இன்றுபொல்லாத விளைவுகள் கண்டோம் --- நாட்டின் பொதுமக்கள் அவதியைக் காண்க !மக்கள்தமை அலைக்கழிக்க மாட்சியதும் பறிபோகும்,தக்கநல் நெறிகாக்கத் தான்பெருமை! --- அக்கரைகொண்டநற் செயல்பாடே குன்றாப் புகழ்சேர்க்கும் ;மண்ணாள்வோர்க் கிதுகூட்டும் மாட்சி !மட்டமான செயல்திறனை , மாண்பற்றப் போக்குதனை ,விட்டொழிக்க மோடியினி விழையட்டும் ; --- திட்டமிதால்நாடிதனின் வளர்ச்சியதும் நாசமுறும் , இதைப்போன்றவேடிக்கைத் திட்டமெலாம் வீண் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
57 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

